Back to homepage

அம்பாறை

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

– எம்.வை. அமீர் – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு 0

🕔21.Jun 2016

– முன்ஸிப் – கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, வட மாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தினூடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் பசியாற்றும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்றது. கதிர்காமத்துக்கு புனித யாத்திரை செல்லும் வகையில், வட மாகாணத்திலிருந்து கடந்த மே

மேலும்...
75 முஅத்தின்களுக்கு கௌரவம்; We care for you பௌண்டேசனின் மற்றுமொரு சாதனை

75 முஅத்தின்களுக்கு கௌரவம்; We care for you பௌண்டேசனின் மற்றுமொரு சாதனை 0

🕔18.Jun 2016

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் 75 முஅத்தின்களைக் கௌரவித்து, அவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வொன்றினை வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசன் நேற்று வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடத்தியது. வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசனின்

மேலும்...
மருதமுனையில் மூன்று முச்சக்கர வண்டிகள் தீக்கிரை

மருதமுனையில் மூன்று முச்சக்கர வண்டிகள் தீக்கிரை 0

🕔18.Jun 2016

– ஏ.எல்.எம். ஸினாஸ் – மருதமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள  இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் பள்ளிவாசல் வளாகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் இன்று சனிக்கிழமை அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் மூன்று பேருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டிகளே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. வீட்டுத் திட்டத்தில்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு 0

🕔16.Jun 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – மாகாண மட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடைய திறமைகளை வலுப்படுத்துவதன் மூலம், நிலைமாற்று நீதி மற்றும் பிரதிநிதித்துவ ஆட்சி ஊடாக, இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் தேசிய இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்துதல் தொடர்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர்ச்சியான செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று வியாழக்கிழமை அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த

மேலும்...
கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை 0

🕔16.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் முயற்சியாளர்கள், தமது நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளும்படி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாணிப மற்றும் கைத்தொழில் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இதற்கிணங்க அரிசி ஆலை, மர ஆலை, நெசவுத்தொழிற்சாலைகள், ஐஸ் உற்பத்திசாலைகள், குடிபான உற்பத்திசாலைகள்

மேலும்...
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம்

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம் 0

🕔15.Jun 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல் 0

🕔15.Jun 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே, இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து, ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம்

கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம் 0

🕔14.Jun 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு 0

🕔13.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமையன்று சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து

மேலும்...
ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி

ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி 0

🕔13.Jun 2016

ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்றதாக கிழக்கு மாகாண ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் தெரிவித்தார் இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும், மாணவ நலன் பிரிவு பணிப்பாளர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கௌரவ அதிதியாகவும்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு 0

🕔12.Jun 2016

– றிசாத் ஏ காதர், எஸ்.அஷ்ரப்கான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கு, பேரவையின் இலச்சினை அடங்கிய மேலங்கி (ரி ஷேட்) வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக அங்கத்தவர்கள் தமக்கான மேலங்கிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு 0

🕔11.Jun 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பேரவையின் இப்தார் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம். ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் சமய தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையானது, ஊடகவியல் தொடர்பான

மேலும்...
கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் 0

🕔4.Jun 2016

– ஹமீட் –கல்முனை நகர் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, சுகாதாரமற்ற வகையில் செயற்பட்ட 13 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டன.கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் கல்முனைப் பிரதேச பொதுச்

மேலும்...
ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2016

– றிசாட் ஏ காதர் – ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுகின்றமையினை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறு பேசுகின்வர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் பேரவையின் மாதாந்த கூட்டம், அண்மையில் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்