அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; தமிழக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பதில் குளறுபடி: அரிசியை வழங்கி விட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக பால்மாவை ‘கிடப்பில்’ வைத்திருப்பது ஏன்? 0
– அஹமட் – தமிழக அரசிடமிருந்து நிவாரணமாகக் கிடைத்த உணவுப் பொருட்களில் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட பால் மா இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக ‘கிடப்பில்’ போடப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவந்துள்ளது. தமிழக அரசிடமிருந்து இலங்கைக்கு அரிசி, பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் – அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.