பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, அமைச்சர் மனோ கணேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிள்ளையான், கடந்த மூன்று வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே, பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர்