Back to homepage

வட மாகாணம்

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை நீக்குமாறு, அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவினரிடம் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில், பொதுமக்களின் கருத்தறியும் வகையில் மேற்படி குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூடியபோது, பெண்கள் அமைப்பொன்று இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது. தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமானது இலங்கையிலுள்ள சிங்கவர்களை மட்டுமே

மேலும்...
வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹகாரவின் இடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பலிஹகாரவின் பதவிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வட மாகாணசபையின் ஆளுர் பலிஹகார அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், அங்கு அவரைச் சந்திப்பதற்கு வந்திருந்த காணாமல் போனோரின் உறவினர்களுடன் பேசியதோடு, அவர்களைச் சந்திப்பதற்கு பிறதொரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினையும் கூறினார்.யாழ்ப்பாணம் சென்றுள்ள இளவரசர் ஹூசைன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.முன்னதாக, முதலமைச்சர் அலுவலகத்துக்கு

மேலும்...
50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது

50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது

ஏழு கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்களுடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கானை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, பெண்ணொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். சாவகச்சேரியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வேன்

மேலும்...
ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்...
பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் பிறந்தநாள் வாழ்த்து

பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் பிறந்தநாள் வாழ்த்து

தழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துண்டுப் பிரசுரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளன. இதில், ‘தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து’ என அச்சிடப்பட்டுள்ளதோடு, பிரபாகரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே, வடக்கிலிருந்து வெளியேற்றியதாகக் கூறுவது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்; சுமந்திரன்

முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே, வடக்கிலிருந்து வெளியேற்றியதாகக் கூறுவது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்; சுமந்திரன்

“வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கு அமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், “பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது

மேலும்...
மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர்

மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர்

– பாறுக் ஷிஹான் –முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம் மக்களை  அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என,   வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறி வருகின்ற நிலையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும்

மேலும்...
புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு விடுத்துள்ளது. மேற்படி அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் அங்கு வாழ்ந்த

மேலும்...
காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு

காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு

காவலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞ‌ருமான மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  நூல் அறிமுக உரையினை ‘செல்லமுத்து வெளியீட்டக’ இயக்குனரும், ‘கனடா படைப்பாளிகள் உலகம்’ இலங்கை ஒருங்கிணைப்பாளருமான‌ யோ. புரட்சி நிகழ்த்தினார். யாழ். இலக்கியக்குவிய தலைவர்

மேலும்...