Back to homepage

வட மாகாணம்

111 கைக்குண்டுகள், உழுத காணியிலிருந்து மீட்பு

111 கைக்குண்டுகள், உழுத காணியிலிருந்து மீட்பு 0

🕔14.Oct 2022

உழுது கொண்டிருந்த காணியொன்றிலிருந்து, 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் – நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை மீட்டதாக யாழ்ப்பாணம் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நவாலி – அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழுத நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றை அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரிடமிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல்; மார்ச் மாதம் நடத்துவோம்: ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல்; மார்ச் மாதம் நடத்துவோம்: ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு 0

🕔21.Sep 2022

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை செப்டம்பர் 20 ஆம் திகதியில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நொவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர், உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற

மேலும்...
17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது

17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது 0

🕔20.Jul 2022

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (19) இரவு டிங்கி படகு ஒன்றில் குறித்த தொகை கஞ்சா கடத்தப்பட்டபோது, கடற்படையினர் இதனை கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாதகல் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் கடற்படை

மேலும்...
மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார் 0

🕔3.May 2022

– அஹமட் – இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான புவனலோஜனி இன்று (03) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் – மூத்த ஒலிபரப்பாளர் காலஞ்சென்ற நடராஜசிவம் அவர்களின் மனைவியாவார். இலங்கை வானொலியில் புகழ்மிக்க அறிவிப்பாளராக பல தசாப்த காலங்கள் புவனலோஜனி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். புவனலோஜனி எழுதிய பல

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும்  போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர் 0

🕔26.Feb 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரா. சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்

மேலும்...
ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல் 0

🕔11.Feb 2022

வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தபோது அங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள்

மேலும்...
வடக்கு மீனவர்களுக்கு சீனத் தூதுவர், 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

வடக்கு மீனவர்களுக்கு சீனத் தூதுவர், 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு 0

🕔16.Dec 2021

– பைஷல் இஸ்மாயில் – வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து,  கடற்றொழில் மற்றும்  நன்னீர் மீன்வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர் வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சந்திப்பு இன்று (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை –

மேலும்...
300 கிலோகிராம் எடையுடைய கடலாமையுடன் நபரொருவர் கைது

300 கிலோகிராம் எடையுடைய கடலாமையுடன் நபரொருவர் கைது 0

🕔12.Dec 2021

மிகப் பெரிய கடலாமை ஒன்றினை தம்வசம் வைத்திருந்த ஒருவரை, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆமை சுமார் 300 கிலோகிராம் எடையுடையது என தெரிவிக்கப்படுகிறது. நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு ஆமையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்து மீட்கப்பட்ட கடலாமை உயிருடன் உள்ளதால், நீதிமன்ற அனுமதியுடன் அதனை குறிகாட்டுவான்

மேலும்...
இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர்

இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர் 0

🕔14.Nov 2021

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த சாகுல் ஹமீட் முகம்மட் முஜாஹிர் என்பவரை நீக்குவதாகக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா ரத்துச் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின்

மேலும்...
13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு 0

🕔2.Nov 2021

இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியானது ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு

வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு 0

🕔29.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டமான வவுனியாவுக்குச் சென்றிருந்த போது அவருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இன்று மாலை (29) வவுனியா – சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த றிசாட் பதியுதீனை பெருந்திரளான மக்கள் வரவேற்று, அவருக்கு தமது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். கட்சித் தொண்டர்கள்,

மேலும்...
இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி

இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி 0

🕔28.Oct 2021

இலங்கையில் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை எவ்வாறு ஜனாதிபதி அமுல்படுத்த எண்ணலாம் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மு்னனாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது ஜனாதிபதி செயலணியொன்றுக்குத் தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லை எனவும்

மேலும்...
அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Oct 2021

ஐந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் சமைத்துக் கொண்டிருந்த போது, தொல்லை கொடுத்த மகளுக்கே, இவ்வாறு சந்தேக நபரான தாய் சூடு வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில்

மேலும்...
மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது 0

🕔9.Oct 2021

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் [கஜமுத்து] வவுனியாவில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க, நேற்று வவுனியாவில் உள்ள உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர்கள் கைதாகினர். அக்குரணை, மஹாவ மற்றும் நிகவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த 29, 30 மற்றும் 53 வயதுடைய

மேலும்...
விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு 0

🕔7.Oct 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்