Back to homepage

பிரதான செய்திகள்

கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து

கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து 0

🕔5.Jun 2016

சலாவ கொஸ்கம ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மேலும்...
கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன 0

🕔5.Jun 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில், நாட்டுக்கு பாரிய சேவை செய்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறியதாகவும்

மேலும்...
ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔5.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டனில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அந்தோணிமலை 01பீ இலக்க தேயிலை மலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்ட தொழிலாளர்கள்,பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்...
பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி

பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி 0

🕔5.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் – ரோயல் கல்லுாாி மாணவன்   சசங்க அல்விஸ் கோமா நிலையில் உள்ளமையினை  ஊடகங்களின் ஊடாக அறிந்து கொண்ட,  வி கேர் (We care) பௌண்டேசன் அமைப்பின் தலைவர்  கல்முனை சர்ஜூன் அபூபக்கா், பாதிக்கப்பட்ட மாணவனின் கொள்ளுப்பிட்டி வீடு தேடி உதவினாா். ரோயல் கல்லுாாி மாணவன் சசங்க அல்விஸ், கடந்த

மேலும்...
ராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆலோசனை

ராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆலோசனை 0

🕔5.Jun 2016

இலங்கை ராணுவத் தளபதி மற்றும் ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது. முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ராணுவத்தினர் ஒத்துழைக்கத் தவறும்பட்சத்தில் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகக் ஆங்கில வார இதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. பல்வேறு படுகொலைகள்

மேலும்...
நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔5.Jun 2016

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்தினால் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வரி நிவாரணங்களை வழங்குவதே அவசியம் என்பது தெரியவந்துள்ளது. எனினும், பொருளாதார நெருக்கடியை

மேலும்...
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம் 0

🕔4.Jun 2016

இலங்கை நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சார கட்டணமாக, 50 தொடக்கம் 60 லட்சம் வரையில் செலுத்தப்படுவதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்தின் இவ்வாறான பாரியளவு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டினை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும்,  நாடாளுமன்ற கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர்

மேலும்...
ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண்

ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண் 0

🕔4.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும், மிகவும் மோசமாகவும் இருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையில் காணப்படுவதாகவும், இவை, நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றதாகவும் அவர் கூறினார். பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரிக்கு

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔4.Jun 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களுக்கு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களை அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மல்வானை பிரதேசத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். அதன்போதே, மேற்படி நிவாரணம் பொருட்களை மக்களிடம் கையளித்தார். இதேவேளை, வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை

மேலும்...
நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள் 0

🕔4.Jun 2016

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி இன்று மறைந்தார். தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகம்மது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது

மேலும்...
கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் 0

🕔4.Jun 2016

– ஹமீட் –கல்முனை நகர் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, சுகாதாரமற்ற வகையில் செயற்பட்ட 13 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டன.கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் கல்முனைப் பிரதேச பொதுச்

மேலும்...
குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம்

குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம் 0

🕔4.Jun 2016

உலகளவில் குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் புகழப்படும் முகமது அலி இன்று சனிக்கிழமை மரணமானார். அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 74 ஆவது வயதில் மரணமடைந்தார். பார்கின்சன் எனும் நோயால் 1980 ஆம் ஆண்டுபாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளுக்கும்

மேலும்...
பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

ஆளுநர் பத­வியை ரா­ஜி­னாமா செய்யும் நோக்கம் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, தன்னை ரா­ஜி­னாமா செய்­யு­மாறு அரசு தரப்­பி­லி­ருந்து எவ்­வித கோரிக்­கைகளும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார். ‘கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வில­கலாம்’ எனும் தலைப்பில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்த செய்தி தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும்

மேலும்...
யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன. யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ மிக நெருக்கமாக உள்ள படங்களும் இவ்வாறு வெளியாகியுள்ளன. யோசிதவின் புதிய காதலி யொஹானா  -கண்டி மாவட்ட அரசியல்வாதி லொஹான் ரத்வத்தயின் மகளாவார். மேலும், இவர் – முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்