Back to homepage

பிரதான செய்திகள்

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔15.Aug 2016

மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, சுதந்திரக் கட்சியினர் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டுமெனவும், ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சி சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ் விடயத்தினைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...
நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்வை, நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை, நாமலை விளக்க மறியலில் வைக்குமாறு இதன் போது நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்...
தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி

தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி 0

🕔15.Aug 2016

– அஹமட் –  மு.கா. தலைவர் ஹக்கீம் சார்பாக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவரை தொலைபேசியில் அழைத்து, ஹசனலி சூடாகவும், கடுமையாகவும் பேசியதாகத் தெரியவருகிறது. மு.கா. தலைவருக்கும், செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கட்சிக்குள் மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது தலைவர் ஹக்கீமுடைய

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற

மேலும்...
பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்

பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் 0

🕔15.Aug 2016

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது களுபோவிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக  சரத் அப்றூ மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...
உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம்

உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம் 0

🕔15.Aug 2016

உலகின் வேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமெய்கா நாட்டின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், றியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார். அந்தவகையில், 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை தொடர்ச்சியாக உசைன் போல்ட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை

கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை 0

🕔14.Aug 2016

விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைத் தொகுதியினுள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்துடன், புலிகளால் தமிழீழம் என அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும் அச்சிடப்பட்ட டீ சேட் கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டி நகரிலுள்ள  ஆடை விற்பனை நிலையத்தினர், கொள்வனவு செய்திருந்த ஆடைத் தொகுதியினுள்ளிருந்து, இந்த டீ சேட்  கைப்பற்றப்பட்டுள்ளது. டீ சேட்டின் முன்பக்கம் பிரபாகரனின் உருவப்படமும், பின்புறமாக தமிழீழம் என புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும்,

மேலும்...
இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம் 0

🕔14.Aug 2016

‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். ‘இணைந்த வடக்கு

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...
நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம் 0

🕔14.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ் எதிரிசிங்க எனும் தனது நண்பர் ஒருவரிடமிருந்தே, யோஷித ராஜபக்ஷ கப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுரேஸ் எதிரிசிங்கவின் தந்தை, வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகராவார். யோஷித்தவின் நண்பரான

மேலும்...
வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம் 0

🕔14.Aug 2016

வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவுக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டன் நகரில இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீடுகளை வழங்கி, அவற்றின் உரிமையாளர்களாக தோட்டத் தொழிலாளர்களை மாற்ற வேண்டுமென்றும், இந்த ஆர்ப்பாட்த்தின் போது அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம்

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம் 0

🕔14.Aug 2016

– றியாஸ் ஆதம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அனுசரணையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாரை கச்சேரிக்கு முன்னால் அமைந்துள்ள உதவிப் பொது முகாமையாளர் (கிழக்கு) காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்

தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் 0

🕔14.Aug 2016

தென்னிந்திய கவிஞரும், தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார், திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். இறக்கும்போது 41 வயதுடைய – நா.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்