Back to homepage

பிரதான செய்திகள்

தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில்

தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வெளியாகும் செய்தி, பொய்யானது என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெறவுள்ள வெற்றியை தடுக்க, சிலரின் அழுத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென, சுசில் பிரேமஜயந்த கூறினார்.

மேலும்...
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர்

மேலும்...
10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது

10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது,  10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் –

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அந்தவகையில், இன்று நள்ளிரவின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள், சட்ட விரோதமானவையாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வேட்பாளர்களின் தொகுதிவாரியான அலுவலகங்கள் அனைத்தும் நாளை சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு வேட்பாளரும், தமக்கென ஒரு மாவட்டக் காரியாலயத்தினை செயற்பாட்பாட்டில்

மேலும்...
நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இன்று வியாழக்கிழமை மாலை, 05 பக்கங்களைக் கொண்ட, சிங்கள மொழியிலான கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என்பது அறிந்ததே. அந்தக் கடிதத்தின் முழுமையான விபரம்)இரண்டு தசாப்த காலமாக, நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும்

மேலும்...
நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்

மேலும்...
வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவினை,   இன்று வியாழக்கிழமை – மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா என்பவர், வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிராக

மேலும்...
மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு

‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு

– பழுலுல்லாஹ் பர்ஹான் –‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக, மேற்படி நூல் வெளியிடப்பட்டுள்ளது.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு

மேலும்...
அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல்,  எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்