Back to homepage

பிரதான செய்திகள்

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை 0

🕔16.Aug 2016

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தாரிடம், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, அவருடைய வீட்டு மேல் மாடியிலிருந்து, கீழே விழுந்து நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று

மேலும்...
பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள்

பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள் 0

🕔16.Aug 2016

பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை முழுப் பணத்தினையும் ஒரேயடியாகச் செலுத்தி கொள்வனவு செய்கின்றவர்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்குரிய 07 லீட்டர் ஒயில் இலசமாக வழங்கப்படுகிறது.

மேலும்...
அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி

அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி 0

🕔16.Aug 2016

– பாறுக் ஷிஹான் –சஊதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள தனவந்தர்களுடன், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் செய்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.யாழ் மஜ்ஜிதுல் மரியம் ஜும்மா பள்ளிவாசலில்,  பொது மக்களுடனான சந்திப்பினையடுத்து, தன்னுடன் வருகை தந்திருந்த அரபு நாட்டு

மேலும்...
உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை

உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை 0

🕔16.Aug 2016

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த, கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணி புரிவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் கடமைகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைகள்

மேலும்...
காதலனுடன் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண், ராவணா நீர் வீழ்ச்சியில் விழுந்து மரணம்

காதலனுடன் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண், ராவணா நீர் வீழ்ச்சியில் விழுந்து மரணம் 0

🕔15.Aug 2016

– க. கிஷாந்தன் – காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர், ராவணா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரவளை ராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்தபோது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் அபாயகரமான மலைப்பகுதியை நோக்கி ஏறும் சந்தர்ப்பத்திலேயே, குறித்த பெண் தவறி விழுந்துள்ளார். தனது காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப்

மேலும்...
தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔15.Aug 2016

மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, சுதந்திரக் கட்சியினர் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டுமெனவும், ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சி சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ் விடயத்தினைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...
நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்வை, நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை, நாமலை விளக்க மறியலில் வைக்குமாறு இதன் போது நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்...
தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி

தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி 0

🕔15.Aug 2016

– அஹமட் –  மு.கா. தலைவர் ஹக்கீம் சார்பாக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவரை தொலைபேசியில் அழைத்து, ஹசனலி சூடாகவும், கடுமையாகவும் பேசியதாகத் தெரியவருகிறது. மு.கா. தலைவருக்கும், செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கட்சிக்குள் மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது தலைவர் ஹக்கீமுடைய

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற

மேலும்...
பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்

பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் 0

🕔15.Aug 2016

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது களுபோவிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக  சரத் அப்றூ மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...
உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம்

உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம் 0

🕔15.Aug 2016

உலகின் வேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமெய்கா நாட்டின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், றியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார். அந்தவகையில், 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை தொடர்ச்சியாக உசைன் போல்ட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை

கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை 0

🕔14.Aug 2016

விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைத் தொகுதியினுள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்துடன், புலிகளால் தமிழீழம் என அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும் அச்சிடப்பட்ட டீ சேட் கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டி நகரிலுள்ள  ஆடை விற்பனை நிலையத்தினர், கொள்வனவு செய்திருந்த ஆடைத் தொகுதியினுள்ளிருந்து, இந்த டீ சேட்  கைப்பற்றப்பட்டுள்ளது. டீ சேட்டின் முன்பக்கம் பிரபாகரனின் உருவப்படமும், பின்புறமாக தமிழீழம் என புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும்,

மேலும்...
இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம் 0

🕔14.Aug 2016

‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். ‘இணைந்த வடக்கு

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்