Back to homepage

பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத் 0

🕔24.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் விடயத்தில் விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென, நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது

மேலும்...
வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு

வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு  அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை

மேலும்...
களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு

களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு 0

🕔23.Dec 2016

விமானத்தின் பாகம் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படும் பொருள் ஒன்று, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்டுள்ளது. கடற்கரை பகுதியில் பாரிய இயந்திரம் போன்றதொரு பொருள் கிடப்பமை அவதானித்த மீனவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை பார்வையிட்ட பின்னர், குறித்த பொருள் விமானத்தின்

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை

நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை 0

🕔22.Dec 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவினை ராஜிநாமாச் செய்வதற்கான கடிதத்தினை வழங்கியமையினை அடுத்து, அவருக்கு வேறொரு பதவியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டு,

மேலும்...
பண்டாரநாயக்க விமான நிலையம், மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது: அமைச்சர் நிமல் அறிவிப்பு

பண்டாரநாயக்க விமான நிலையம், மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது: அமைச்சர் நிமல் அறிவிப்பு 0

🕔22.Dec 2016

– அஷ்ரப் ஏ சமத் –பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  ஜனவரி 06ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05ஆம் திகதி  வரையிலான  03 மாதங்களுக்கு  மூடப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமா சேவைகள் அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தாா்.ஓடுபாதைகள் விஸ்தரிப்பு நிர்மாணத்தின் பொருட்டு தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30

மேலும்...
காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர்

காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔22.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – இலங்கை அரசியல் அரங்கில், 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த முஸ்லிம் சமூகம், இனி வெட்டப்படும் காயாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்  கவலை தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்கள் – காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை,

மேலும்...
மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 0

🕔22.Dec 2016

– க. கிஷாந்தன் – ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். விறகு

மேலும்...
பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0

🕔22.Dec 2016

பண்டிகளைக் காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையிலான திட்டமொன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். மேலும், பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  அவர் கூறியுள்ளார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர்

மேலும்...
கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Dec 2016

– எம்.ஜே. எம். சஜீத் –கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் தலையீடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது கல்விப் பணி புரிவேன் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கூறியிருந்த நிலையில், மேற்படி நிலை உருவாகியுள்ளதாகவும் உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான

மேலும்...
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது 0

🕔18.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள  334  பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. தேசிய இளைஞர் சேவை சபை, ஸ்ரீ லங்கா இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து இளைஞர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீ லங்கா இளைஞர்

மேலும்...
மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர்

மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர் 0

🕔17.Dec 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் கட்சியின் செயலாளர் என்று மு.கா. தலைவரால் சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், ஹசனலியை கட்சிக்குள்ளிருந்து ஒதுக்குவதற்காக – ரஊப் ஹக்கீமுக்கு விலைபோன ஒருவர் என்று மு.காங்கிரசின் அதியுயர்பீட முக்கியஸ்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி

அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி 0

🕔17.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், கிடைத்த வளங்களை பயன்படுத்தாமல், அழிந்து போக விடுவது, பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடாகும். அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனை கிராமத்தில், பல லட்சம் ரூபாய் பெறுமதியில் அமையப்பெற்றுள்ள

மேலும்...
வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம்

வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம் 0

🕔17.Dec 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பானணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை  மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேனும், யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10

மேலும்...
வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை இனி திருத்தலாம், அழிக்கலாம்

வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை இனி திருத்தலாம், அழிக்கலாம் 0

🕔16.Dec 2016

வட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி விட்டால் , பிறகு அனுப்பப்பட்ட தகவலை அழித்து விடவோ, திருத்தம் செய்யவோ முடியாது. இது ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை திருத்தம் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை திருத்தம் செய்தல் மற்றும் அழித்தல் போன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்