Back to homepage

பிரதான செய்திகள்

இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு

இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு 0

🕔19.Mar 2017

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, இனி பாடப் போவதில்லை என்று புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு

மேலும்...
கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு 0

🕔19.Mar 2017

இலங்கை தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் தனக்குக் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சுவிஸ்ஸர்லாந்து நாடுகளின் குடியுரிமையினை மஹிந்த சமரசிங்க கொண்டிருப்பதாக, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்திருந்தமையானது, பொய்யான தகவல் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா

மேலும்...
ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை 0

🕔19.Mar 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கு, டிசம்பரில் தேர்தல்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கு, டிசம்பரில் தேர்தல் 0

🕔19.Mar 2017

கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களையே டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்சிக் காலம் நிறைவடையும் 03 மாகாண சபைகளுக்கே இவ்வாறு தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளதன. இந்த நிலையில், மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த பின்னர்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு

அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு 0

🕔18.Mar 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில், மருத்துவம், பிரதேச செயலகத்தின் சேவைகள், தபால் சேவை மற்றும் காணாமல் போன ஆவணங்களுக்கான முறைப்பாட்டு பதிவுகளை வழங்கும் பொலிஸாரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள்

மேலும்...
ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு

ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு 0

🕔18.Mar 2017

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் மிரா் பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகா்க்கும் தனிக்கை’ எனும் நூலின் வெளியீட்டு விழா, நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சிரேஷ்ட ஊடகவியலாளா் ந. வித்தியாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு

மேலும்...
கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர் 0

🕔17.Mar 2017

– றிசாத் ஏ காதர் – தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் இறக்காமம் பிரதேச மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் மேலும் கூறுகையில்; “தேசிய கல்விக் கல்லூரிக்கு வருடந்தம் மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு உள்ளீர்ப்புச்

மேலும்...
கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி

கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி 0

🕔17.Mar 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் சட்ட மூலத்தினைத்தினை நாடாளுமன்றுக்குக் கொண்டு வர, அப்போதை எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, அவரை – அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாக்குவதற்கு முயற்சித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு, கரு

மேலும்...
சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு

சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு 0

🕔17.Mar 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாம் விடுவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கடந்த்தப்பட்ட கப்பலை விட்டும் கொள்ளையர்கள்  சென்று விட்டதாகவும்,  விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளார்கள். கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்தனர். இதனையடுத்து, கப்பலைச் சுற்றி வளைத்த சோமாலிய கடற்படையினர்

மேலும்...
திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2017

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, அகில இலங்கை

மேலும்...
டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார்

டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார் 0

🕔16.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – டெங்கு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேசத்துக்கு 79 லட்சம் ரூபாவினை அவசரமாக ஒதுக்குவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கிண்ணியாவுக்கு இன்று வியாழக்கிழமை மாலை அமைச்சர் விஜயமொன்றினை மேற்கொண்டபோதே, இதனைக் கூறினா். அதேவேளை, கிண்ணியாவில் டெங்கு நோயினால்  மக்கள் படுகின்ற அவஸ்தைகளை  மீண்டும்  ஜனாதிபதியை சந்தித்து

மேலும்...
ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி

ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி 0

🕔16.Mar 2017

– அகமட் சஹ்ரான்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுடன் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார். மு.கா. தலைவருடன் ஹசனலி இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும்

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை 0

🕔16.Mar 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு தடுக்கப்பட்டமையினையடுத்து, பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கடந்த சில வாரங்களாக பிரதேச செயலகத்துக்கு வருகை தருவதிலிருந்தும் தவிர்ந்து வருகின்றார். சமூக அக்கறையும், நேர்த்தியான நிருவாக சேவை அனுபவத்தினையும் கொண்ட பிரதேச செயலாளர் ஹனீபாவின் இந்த இடைக்கால சேவை இழப்பு தொடர்பில், அட்டாளைச்சேனை

மேலும்...
நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம்

நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம் 0

🕔15.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாட்டில் இல்லாத நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றுமாறு, அவரை மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணித்துள்ளார் என்று, மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பிரதியமைச்சர் மலேசியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில்

மேலும்...
அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 0

🕔15.Mar 2017

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்கி வருவதான் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்களும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான வொஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்