Back to homepage

பிரதான செய்திகள்

யாழ் மாநகர சபையில், அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அநீதி; காற்றில் பறந்தன வாக்குறுதிகள்

யாழ் மாநகர சபையில், அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அநீதி; காற்றில் பறந்தன வாக்குறுதிகள் 0

🕔14.Mar 2018

– பாறுக் ஷிஹான் –உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பில்  வாக்குறுதிளித்த எந்த அரசியல் கட்சியும், தமது விகிதாசாரப் பட்டியல் ஊடாக முஸ்லிம்களை உறுப்பினராக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது  யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள்

மேலும்...
முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை

முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை 0

🕔14.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் இடையில் இன்னுமொரு குடுமிச் சண்டை ஆரம்பித்திருக்கிறது. அதனால், ஹரீஸுக்கு எதிராக தனது வழமையான பாணியில் மு.கா. தலைவர் ஹக்கீம், குழி வெட்டத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று மு.காங்கிரசின் உயர் பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின்

மேலும்...
ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின

ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின 0

🕔13.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்

கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம் 0

🕔13.Mar 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர், நிதி சேகரிப்பவர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தனது பங்களிப்பினையும்

மேலும்...
கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர 0

🕔13.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
துப்பாக்கி காட்டி சாரதியை தாக்கிய தம்பதியினருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

துப்பாக்கி காட்டி சாரதியை தாக்கிய தம்பதியினருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔13.Mar 2018

 தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி தாரக பெரேரா ஆகியோரை தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. தனியார் பஸ் ஒன்று, தமது வாகனத்துக்கு வழி விடாமல் பயணித்ததாகக் கூறி,  தென் மாகாண சபை உறுப்பினர் கசுனும் அவரின்

மேலும்...
சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன்

சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன் 0

🕔13.Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் நீக்கப்படும் என்று, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவொன்று, வரும் வியாழக்கிழமை இலங்கை வந்து,

மேலும்...
சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார் 0

🕔13.Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி, இலங்கையின் நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு

மேலும்...
ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்?

ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்? 0

🕔13.Mar 2018

– ஹபீல் எம். சுஹைர் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விசேட அம்சம் என்னவென்றால் பிரதியமைச்சர் ஹரீஸு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் – மேல் எழுந்தமையாகும். அலசிப் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க, ஆர்வமூட்ட வேண்டிய விடயத்தை

மேலும்...
இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார்

இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார் 0

🕔12.Mar 2018

இலங்கையிலும் கட்டார் நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த ரணவக்க துஷார எனப்படும் சாலிய ரணவக்கவை, கட்டார் பொலிஸார் கைது செய்தமையைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். தற்போது சிறையிலமைக்கப்பட்டுள்ள சாலிய ரணவக்க, நாளை திங்கட்கிழமை பிற்பகல் கட்டாரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி

மேலும்...
பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன? 0

🕔12.Mar 2018

– றிஸ்கான் முஹம்மட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற

மேலும்...
கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம்

கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம் 0

🕔12.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் இழப்புகளை மதிப்பீடு செய்வதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள குரல்கள் இயக்கம், அது தொடர்பான இறுதி அறிக்கையினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறித்த கள ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள், இழப்பீடு அளவிடும்

மேலும்...
கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும்

கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும் 0

🕔12.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. சிலரின் கையிலுள்ள

மேலும்...
விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம்

விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம் 0

🕔12.Mar 2018

விமானமொன்று நேபாளம் – காத்மண்டுவிலுள்ள ரிப்ஹுவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விமானம் ஓடு பாதையில் தவறான திசை வழியாகத் தரையிரங்கிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ நாட்டிலுள்ள யு.எஸ் – பங்ளா ஏர்லைன்ஸ்

மேலும்...
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது 0

🕔12.Mar 2018

ஆனமடுவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசியதில், குறித்த ஹோட்டல் தீப்பற்றி எரிந்தது. குறித்த ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி 07 சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்