Back to homepage

பிரதான செய்திகள்

கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம்

கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம்

– நூருள் ஹுதா உமர் – கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கொண்டு வந்த இந்தப் பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும்...
கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு

கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு – தலைமுடியை இழந்த பெண் நோயாளிகளுக்கு ‘விக்’ (பொய் முடி) செய்யும் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்து ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அதில்; ‘புற்றுநோய் என்பது நோயாளிக்கு மட்டுமன்றி அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் பயமுறுத்தும், கொடூரமான,

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரை

மேலும்...
கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். “பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8

மேலும்...
புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

– அஸ்லம் எஸ். மௌலானா – நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, றமழான் பெருநாளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக பெண்கள் புடவைக் கடைகளுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயத்தை வலியுறுத்தி இவ்விரு நிறுவனங்களும் இணைந்து

மேலும்...
முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

– முகம்மது தம்பி மரைக்கார் – (தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்த ‘சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ எனும் கட்டுரையின் சில பகுதிகளே இவையாகும்) அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான் – முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார். “கடந்த தேர்தலுக்கு 700

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு;  நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு; நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரசியல் கட்சிகளிடன் பிரதிநிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர இது தொடர்பில்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள்

மேலும்...
சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 01 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை

மேலும்...