Back to homepage

வீடியோ

சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

– முன்சிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம்

மேலும்...
பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம்

பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம்

‘பிளாஸ்ரிக் அரிசி’ என்கிற கதை அண்மைக் காலமாக உரத்தும் பரவலாகவும் பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், இணையங்களிலெல்லாம் பிளாஸ்ரிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டை பிடித்து, பந்துபோல் நிலத்தில் அடித்துக் காண்பிக்கும் வீடியோக்களை அடிக்கடி காணக் கிடைக்கிறது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பிளாஸ்ரிக் அரிசி என்பதை நம்புகிறார்கள். அது நமது வீட்டுக்கு

மேலும்...
உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித குர்ஆன் பிரதி, இனிமேல் ஒரு மலையாளிக்கே சொந்தமாகிறது. 02 கிலோ நிறையுடைய இந்தத் தங்கக் குர்ஆனின் இந்திய விலை 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை

மேலும்...
மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு  நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான 110 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான

மேலும்...
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு

  – எம்.ஐ. முபாறக் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை ஒட்டி, பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி, பாடசாலையில் இடம்பெறவுள்ளது. நடை பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் இந்த ஒன்றுகூடல் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு மாபெரும் நடை பவனியுடன் இந்த

மேலும்...
பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி

பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி

– முஸ்ஸப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையினைத் தீர்க்கும் பொருட்டு, அங்கு ஐந்து கிணறுகளை அமைத்துள்ளதாகவும், அதற்காக தனது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாவினை செலவு செய்ததாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ள கணக்கு, மக்களிடையே பாரிய அதிர்ச்சியினையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில்

மேலும்...
மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

– முன்ஸிப் அஹமட் – கதை – 01 மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார். அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின்

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

– எம்.ஜே.எம். சஜீத் – மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர். இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு

மேலும்...
பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும்

மேலும்...