Back to homepage

ஆசிரியர் கருத்து - Editorial

புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை

புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை 0

🕔2.Aug 2018

 – புதிது ஆசிரியர் பீடம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிகரட் மற்றும் பீடி போன்ற புகைத்தல் பொருட்களின் விற்பனையினை நிறுத்துவதற்கு, சில அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அண்மையில் முயற்சிகளை மேற்கொண்ட போதும், கணிசமான வியாபார நிலையங்களில் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமையைக் காணக் கூடியதாகவே உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சிகரட் வியாபாரம் எதிர்பார்க்கப்பட்ட வகையில் நிறுத்தப்பட்டதாகத்

மேலும்...
பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது

பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது 0

🕔27.Apr 2018

– புதிது ஆசிரியர் பீடம் – திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் கண்டிப்பதாகக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்தாம்பசலித்தனமாக விடுகின்ற அறிக்கைகளையும், எழுதும் கடிதங்களையும் ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் வெளியிடாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய உடையினை உடுத்துவதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள போதும், அது

மேலும்...
தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்

தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும் 0

🕔30.Dec 2017

– ஆசிரியர் கருத்து – தேர்தல் சட்டங்கள் குறித்து நம்மவர்களில் கணிசமானோர் அறிந்தவர்களாக இல்லை. அதனால்தான், தேர்தல் காலங்களில் அநேகமமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ட இடத்திலெல்லாம் வேட்பாளர்களின் விளம்பர பதாதைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, வாக்குச் சீட்டின் மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதெல்லாம், ஏதோ தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்சொன்னவை

மேலும்...
சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது

சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது 0

🕔26.Nov 2017

– ஆசிரியர் கருத்து – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, அப் பிரதேசத்தவர்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்த செயற்பாடுகள் தவறான திசை நோக்கித்  திரும்புகின்றனவா என்கிற கேள்வியினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சாத்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான செயற்பாடுகள், ஒரு கட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் சாய்ந்தமருதிலுள்ள வீட்டுக்கு

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும் 0

🕔28.Oct 2017

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச

மேலும்...
எதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்

எதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும் 0

🕔4.Oct 2017

– ஆசிரியர் கருத்து – சூரியன் எப்.எம். வானொலியின் செய்தி அறிக்கையொன்றில் ரோஹிங்ய அகதிகளை, ‘ரோஹிங்ய எதிரிகள்’ என்று கூறப்பட்டதாகத் தெரிவித்து, முஸ்லிம்களில் ஒரு தொகையினர், சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர் – வருகின்றனர். இதனைக் காரணம் காட்டி, சூரியன் வானொலியை புறக்கணியுங்கள் என்று, பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கப்படுவதையும் காணக்கிடைக்கிறது.

மேலும்...
கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம் 0

🕔27.Jul 2017

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும். அமைச்சர்

மேலும்...
தலை குனிவு

தலை குனிவு 0

🕔18.Jun 2017

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களின் தனிப்பட்ட நடத்தைகளையெல்லாம் வைத்து, இஸ்லாத்தை மட்டிடக் கூடாது என்று, முஸ்லிம் மார்க்க அறிஞர்களே கூறுவதுண்டு. சீரிய ஒழுக்க முறையினை இஸ்லாம் போதித்துள்ள போதும், அந்த மார்க்கத்தினைப் பின்பற்றும் எல்லோரும், இஸ்லாம் சொல்லித்தரும் ஒழுக்கங்களை போதுமானளவு கூடப் பின்பற்றுவதில்லை. இது நோன்பு மாதம், பாவச் செயல்களிலிருந்து முடிந்த வரை ஒதுங்கியிருப்பதற்கே,

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது 0

🕔30.May 2017

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது

ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது 0

🕔23.May 2017

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், இனவாத செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதாக்குறைக்கு, சட்டம் – ஒழுங்கினை நிறைவேற்ற வேண்டிய பொலிஸாரும், இனவாதிகளின் மோசமான நடவடிக்கைகளைக் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்து என்னதான் செய்வது என்கிற கேள்வி, முஸ்லிம்களின் முன்னால், மலையாக

மேலும்...