இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான கிளிநொச்சி மாணவி கலையரசி: யார் இவர்? 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின்