Back to homepage

வெளிநாடு

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம் 0

🕔25.Jun 2017

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே

மேலும்...
இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி 0

🕔23.Jun 2017

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின் உத்தரவுக்கிணங்கவே, இளவரசி டயானாவை, தான் கென்றதாகக் கூறியுள்ளார். 80 வயதுடைய ஹொப்கின்ஸ், எம்.ஐ.5 உளவு நிறுவனத்தில் 38 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 20 வருடங்களாக இளவரசி டயானாவின் மரணம்

மேலும்...
13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு 0

🕔23.Jun 2017

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால், கட்டார் மீதான தடையினை நீக்குவதாக சஊதி அரேபியா உள்ளிட்ட நான்கு அரபு  நாடுகள் தெரிவித்துள்ளன. கட்டாரிடம் சஊதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் எதிர்பார்க்கும் விடயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அந்தப் பட்டிலியலில்தான் மேலுள்ள

மேலும்...
பூமியை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி விட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

பூமியை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி விட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை 0

🕔21.Jun 2017

மனித இனம் தொடர்ந்தும் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020ஆம் ஆண்டிலும், செவ்வாய்க்கு 2025ஆம் ஆண்டுக்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என்று, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை

மேலும்...
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது 0

🕔19.Jun 2017

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி அரேபியாவின் தமாமில் இருந்து இந்தியாவின் கொச்சி நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தப் பிரசவம் நடந்துள்ளது.162 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் பயணம்

மேலும்...
முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம் 0

🕔19.Jun 2017

ரமழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது. ஃபின்ஸ்ஸ்பரி பார்க் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய மக்கள் கூட்டத்தை நோக்கி, குறித்த வேன் சென்று மோதியதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு

சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு 0

🕔18.Jun 2017

கட்டட ஒப்பந்தகாரர்கள், சில  கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை அவர்களால் நிர்மாணிக்க முடிவதில்லை. அப்படி நிர்மாணிப்பது அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தரம் குறைந்த பொருட்களை குறைந்த விலைக்குப் பெற்று, அவற்றினை கட்டட நிர்மாணத்துக்கு பயன்படுத்த

மேலும்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது 0

🕔16.Jun 2017

இந்தியா – தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பலோ மருத்துவ மனையில் வழங்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் இந்திய மதிப்பில் 06 கோடி ரூபாய் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்) எனத் தெரிவிக்கப்படுகிறது. சுகயீனம் காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக

மேலும்...
ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்

ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம் 0

🕔15.Jun 2017

ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் இது குறித்து நேற்று புதன்கிழமை ஒலிப்பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில்; “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த டோரா போரா மலைப்பகுதியில் ஐ.எஸ். கொடி பறக்கிறது” என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அவர்களின் குடியிருப்புக்களிலேயே இருக்குமாறு தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும்,

மேலும்...
லண்டன் தீ விபத்து; 29 வருட அனுபவத்தில் இப்படியொரு விபத்தை சந்தித்ததில்லை: லண்டன் தீயணைப்பு ஆணையாளர்

லண்டன் தீ விபத்து; 29 வருட அனுபவத்தில் இப்படியொரு விபத்தை சந்தித்ததில்லை: லண்டன் தீயணைப்பு ஆணையாளர் 0

🕔14.Jun 2017

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள குடியிருப்பு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் பலியானதாகவும், 74 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 24 மாடிகளைக் கொண்ட மேற்படி கட்டடத்தில், 120 குடியிருப்புகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை ஏற்பட்ட மேற்படி பாரிய

மேலும்...
களை கட்டும் மீன் சிகிச்சை: உயிருள்ள மீனை வாயில் போட்டு, அப்படியே ‘க்ளாக்’

களை கட்டும் மீன் சிகிச்சை: உயிருள்ள மீனை வாயில் போட்டு, அப்படியே ‘க்ளாக்’ 0

🕔10.Jun 2017

உயிருள்ள மீன் ஒன்றினை அப்படியே அலாக்காக வாயில் போட்டு உங்களால் விழுங்க முடியுமா என்று கேட்டால், நாம் ஒரு கணம் மிரண்டு விடுவோம். ஆனால், ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் சிசிச்சைக்காக உயிருள்ள மீனின் வாயில் மருந்தை வைத்து, அந்த மீனை நோயாளியின் வாய்க்குள் போட்டு, விழுங்க வைக்கிறார்கள். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த

மேலும்...
காணாமல் போனது மியன்மார் விமானம்; 116 பேர் உள்ளே

காணாமல் போனது மியன்மார் விமானம்; 116 பேர் உள்ளே 0

🕔7.Jun 2017

மியன்மார் ராணுவ விமானமொன்று 116 பேருடன் இன்று புதன்கிழமை  காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கிலுள்ள மெயிக் மற்றும் யங்கோன் நகரங்களுக்கிடையில் இந்த விமானம் காணாமல் போனதாக மியன்மார் ராணுவ பிரதானி மற்றும் விமான நிலைய தரப்பினர் தெரிவிக்கின்றனர். தென் பகுதியிலுள்ள டாவி எனும் நகரத்தை அடைவதற்கு 20 மைல்கள் உள்ளபோது, திடீரென்று விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக

மேலும்...
பதிலடி: சஊதிக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவிப்பு

பதிலடி: சஊதிக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவிப்பு 0

🕔5.Jun 2017

கட்டார் நாட்டுடனான உறவகளைத் துண்டிப்பதாக சஊதி அரேபியா அறிவித்ததை அடுத்து, சஊதிக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவாகச் செயல்படுவதாகக் தெரிவித்து, சஊதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், கட்டாருடனான தூதரகத் தொடர்புகள் உள்பட  அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்தன. இதனையடுத்து கட்டாரின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும்

மேலும்...
கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை

கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை 0

🕔5.Jun 2017

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து, சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மேற்படி நாடுகள் தமது கடல் மற்றும் வான் வழிப் பாதைகளை கட்டார் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. பயங்கரவாதத்துக்கு

மேலும்...
லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை 0

🕔4.Jun 2017

பிரித்தானியாவின் லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில், 07 பேர் கொல்லப்பட்டதோடு, காயமடைந்த 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட 03 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. பாலத்தில் பயணித்த மக்களை வாகனத்தால் மோதியதொடு, அதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்