Back to homepage

சர்வதேசம்

பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: நியூசிலாந்தில் சம்பவம்

பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: நியூசிலாந்தில் சம்பவம்

நியூசிலாந்தில் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 09பேர் பலியாகி உள்ளனர். எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியினர் எவரும் இதில் பாதிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது ராணுவ உடைபோல் அணிந்து வந்த

மேலும்...
இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது

மேலும்...
டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை

டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஆகியோருக்கிடையில் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக இருந்தது.

மேலும்...
பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு

பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு

பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான், சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி

மேலும்...
பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம்

பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பங்களாதேஷ் இல் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகளுடன் பயணித்த மேற்படி ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி

பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள நூற்றாண்டுகள் பழமையான குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவிவிக்கின்றன. எவ்வாறாயினும், உயிரிழப்புகள் அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி குடியிருப்புப் பகுதியில் ரசாயனக் களஞ்சியசாலையொன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. “56 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது”

மேலும்...
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது.

மேலும்...
இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்

இந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. அந்த வீடியோவில் குறளரசன், அவரின் தந்தை டி. ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாமிய மத பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் கலிமாவை உச்சரிக்கின்றார். இந்த

மேலும்...
சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார்

சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார்

ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன், அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு

மேலும்...
என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

என்னைக் கேட்காமல் ஏன் என்னைப் பெற்றீர்கள்: பெற்றோருக்கு எதிராக, நீதிமன்றம் செல்ல இளைஞர் முடிவு

தனது சம்மதின்றி தன்னைப் பெற்றெடுத்த தாய் – தந்தையருக்கு எதிராக, இந்தியா – மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேற்படி நபர் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர், தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது

மேலும்...