Back to homepage

வெளிநாடு

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா 0

🕔19.Apr 2024

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில் மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருள்கள் இடைமறிக்கப்பட்டன என, ஈரான் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஈரானின் இஸ்ஃபஹான் மாகாண வானத்தில் மூன்று ட்ரோன்கள் காணப்பட்டன என்றும்,

மேலும்...
“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு 0

🕔17.Apr 2024

இஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது, ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலின்போது நிரூபணம் ஆகியிருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள், ஈரானின் பல ஏவுகணைகளை

மேலும்...
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு 0

🕔14.Apr 2024

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இம்மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறுகிறது. இந்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

மேலும்...
உலகில் வயதான மனிதர் காலமானார்

உலகில் வயதான மனிதர் காலமானார் 0

🕔3.Apr 2024

உலகின் மிக வயதான மனிதர் என்று 2022 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுவேலா நாட்டின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (Juan Vicente Perez Mora) என்பவர் தனது 114 வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) காலமானார். இவர் மே 27, 1909 இல் பிறந்தவர். அடுத்த மாதம் – ஜுவான்

மேலும்...
ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம் 0

🕔23.Mar 2024

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 145 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில் 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது நான்கு பேர்

மேலும்...
ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல்

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல் 0

🕔8.Mar 2024

இலங்கை இளைஞர் ஒருவர் கனடாவில் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 05 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பலியான 06 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர். குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய டி.

மேலும்...
கோவிட் தடுப்பூசி 217 முறை செலுத்திக் கொண்ட நபர்: ஆய்வில் கிடைத்த விநோத முடிவு

கோவிட் தடுப்பூசி 217 முறை செலுத்திக் கொண்ட நபர்: ஆய்வில் கிடைத்த விநோத முடிவு 0

🕔7.Mar 2024

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், வைத்தியர்களின் ஆலோசனையை மீறி 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான சம்பவம் குறித்து ‘தி லான்செட்’ (The Lancet) எனும் மருத்துவ ஆய்வு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருட காலத்தில், தனியாரிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

மேலும்...
சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Feb 2024

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திர சிகிச்சை என்பவற்றுக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும்

மேலும்...
நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு 0

🕔10.Feb 2024

நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ராமர் கோவில் தரிசனத்துக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்குச் சென்றுள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று (10) சந்தித்துள்ளார். உத்தர பிரதேசம் – அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலைத் தரிசிப்பதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

மேலும்...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jan 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அரச

மேலும்...
அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் 0

🕔16.Jan 2024

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என, மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் குறித்த கப்பல்

மேலும்...
வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2024

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை சுகாதார அமைச்சராக இருந்த (நுயென் தன் லாங் (Nguyen

மேலும்...
கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு 0

🕔9.Jan 2024

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 25 பெசோ (peso) வில் இருந்து 132 பெசோவாக உயரும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைப் பெறுமதியில் 336 ரூபாவுக்கு கியூபா விற்கப்படும் ஒரு லீட்டர்

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை 0

🕔9.Jan 2024

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில் 4,257 மாணவர்களும், மேற்குக் கரையில் 39 மாணவர்களும் கொல்லப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில், 281 அரசாங்கப் பாடசாலைகளும் 65 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்