Back to homepage

கட்டுரை

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்” என்றும், “எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக

மேலும்...
இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

(கட்டுரையாளர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை விரிவுரையாளராவார்) வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்டமையை தெளிவுபடுத்தும் முயற்சியாக இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. இவர்களை மீளக்குடியமர்த்துவதிலுள்ள சவால்கள், பின்பற்றப்பட வேண்டிய உபாயங்கள் என்பன குறித்து இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோர் கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன.

மேலும்...
ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை

மேலும்...
பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல்

மேலும்...
ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது. அஷ்ரப் நகர் பற்றி முதலில்

மேலும்...
இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு

இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 67 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், அறசறிவியல் துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில் எழுதிய இக்கட்டுரை வெளியிடப்படுகிறது) அறிமுகம் உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவரான டுழபெகநடடழற என்பவரால் எழுதப்பட்ட ‘அறிவுஞானம்’ எனும் கவிதையில்

மேலும்...
கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

(வடக்கு முஸ்லிம்கள், புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவுகூறும் வகையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது) “ஒரு முழு மாகாணத்திலிருமிருந்து ஓர் இனம் வெளியேற்றப்படுவதென்பது சர்வதேச சட்டத்தில் பாரியதொரு குற்றமாகும்.தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், சர்வதேச சமூகம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம்,

மேலும்...
இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை

மேலும்...
ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும். இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும்

மேலும்...
குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல்

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்