Back to homepage

கட்டுரை

மத அடையாள அரசியல்: இலங்கைக்கு பொருத்தமானதா?

மத அடையாள அரசியல்: இலங்கைக்கு பொருத்தமானதா? 0

🕔24.Oct 2016

– ஏ.எல். நிப்றாஸ் – வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில், வீட்டுக்கு சுற்றிலும் உள்ள வளவுக்குள் இருந்து கேட்கின்ற ஆள்அரவமும் காலடி ஓசைகளும் எப்படி நமது மனதில் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துமோ – அதுபோலவே, மத அடையாள அரசியலுக்கான ஊசலாட்டங்கள் இப்போது மனதில் நடுக்கத்தை உண்டுபண்ணுகின்றன.நாட்டில் நிலைமாறுகால நீதி தொடர்பாக பேசப்பட்டு

மேலும்...
வழிபாட்டு அரசியல்

வழிபாட்டு அரசியல் 0

🕔11.Oct 2016

– ஏ.எல். நிப்றாஸ் – ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரே இறைவனை வழிபடுகின்ற முஸ்லிம்களுக்கு, வழிபடுவதற்கான இன்னுமொரு தெரிவே கிடையாது. ஆனால், ஏனைய சில மதங்களில் பல தெய்வ வழிபாடு இருக்கின்றன. அங்கு பொதுவாக, ஒரு தெய்வத்தை வழிபடுபவர் பெரும்பாலும் இன்னுமொரு தெய்வத்தின் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார். ஒரு தெய்வத்தை வழிபடுகின்றவருக்கு இன்னுமொரு தெய்வத்தை

மேலும்...
ஊதிக் கெடுத்தல்

ஊதிக் கெடுத்தல் 0

🕔30.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.“இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக

மேலும்...
ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் 0

🕔23.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்

மேலும்...
ஜீரணிக்க முடியாத உண்மை

ஜீரணிக்க முடியாத உண்மை 0

🕔18.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அந்தப் பெண்ணுக்கு 42 வயது தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித்

மேலும்...
இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’

இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’ 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – திருமணம் – ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்தினால்தான் வாழ்க்கை பூரணப்படுகிறது. இஸ்லாத்திலும் திருமணம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்துக்கென்று சில சட்ட திட்டங்களும், விதிமுறைகளும், ஒழுக்கங்களும் உள்ளன. திருமணத்துக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வயதெல்லை உள்ளது. உடலும், மனமும் திருமணத்துக்குத் தயாராகும் போதுதான் அது நிகழ வேண்டும். ஆனால், தற்காலத்தில்

மேலும்...
வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு 0

🕔13.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில்

மேலும்...
ஓதுவீராக

ஓதுவீராக 0

🕔8.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அந்த எழுதத் தெரியாத பையன்இன்று என்னைச் சந்தித்தான்பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய்என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்யபயிர் முளைத்த பருவம்ஏதோ அலுவலுக்கு வந்திருந்தான்கையொப்பம் இடு என்றேன்இடது கையின் பெரு விரலை ஊன்றிவெட்கிச் சிரித்தான்அது ஒரு செத்த சிரிப்பு என் இதயம் கழன்றுஅவன்

மேலும்...
சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம்

சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம் 0

🕔7.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘இலங்கை – இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம்’ என்று, முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தினால்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆயினும், அந்த ஒப்பந்தத்தினால் வடக்கு –

மேலும்...
கால விசித்திரம்

கால விசித்திரம் 0

🕔1.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்’ என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள். எதிராளிகளை அயோக்கியர்களாகக் காட்டும் வகையில், நமது சித்திரங்களை வரையத் தொடங்குகின்றபோது, அதற்கு வெளியே, நமது எதிராளி உத்தமனாகவும், நாம் அயோக்கியர்களாகவும்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு:  நிகழ்ச்சி முன்னோட்டம்

வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம் 0

🕔30.Aug 2016

– ஏ.எல். நிப்றாஸ் – திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ‘முன்னோட்டங்கள்’ (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அதன் கதை வேறு மாதிரியிருக்கும். கிளைமேக்ஸ் கட்டத்தில் எல்லாம் மாறிவிடும். இன்னும் சில நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு

மேலும்...
மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும் 0

🕔26.Aug 2016

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

மேலும்...
இழப்பின் கதை

இழப்பின் கதை 0

🕔26.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – நம்மைச் சுற்றி நமக்கான எல்லாம் இருந்தபோது, அவற்றின் பெருமைகளை நாம் நினைத்துப் பார்த்ததில்லை. அவற்றினையெல்லாம் நாம் இழந்து விட்ட பிறகுதான், எண்ணியெண்ணி ஏங்கத் தொடங்குகிறோம். நமது பொடுபோக்குகள்தான், இயற்கை நமக்களித்த செவ்வங்களை இல்லாமல் செய்து விட்டன. இருக்கும் போது நினைத்துப் பார்க்க மறப்பதும், இல்லாதபோது ஏங்கித் தவிப்பதும் மனித

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும்

மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும் 0

🕔25.Aug 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடான விடயம், ஊடகங்களில் இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறது. உட்கட்சி ஜனநாயகம் தமது கட்சிக்குள் உள்ளதாக பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முன்பாகவே, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவருக்கான உரையாற்றும் சந்தர்ப்பத்தினை, நான்கைந்து உயர்பீட உறுப்பினர்கள் நாகரீகமற்ற முறையில் தடுத்திருக்கின்றனர். அவரின்

மேலும்...
ஒளித்து விளையாடுதல்

ஒளித்து விளையாடுதல் 0

🕔23.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து ‘ஆடி’க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கின் ஆச்சரியமாகும். ‘வடக்கு – கிழக்கு விவகாரம்’ என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்