இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன? 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும்