Back to homepage

மத்திய மாகாணம்

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது 0

🕔22.Apr 2023

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்கத்துக்கு அழைத்து – பொய்யான தகவல் வழங்கிய சந்தேக நபரை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தவறான தகவல்களை வழங்கிய சந்தேக நபரின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 21 வயதுடைய மௌலவி ஒருவரையே – பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔19.Mar 2023

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம். லமவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், பேராதனை பல்கலைக்கழகம் கட்டிப்பிடிப்பதைத் தடை

மேலும்...
மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல் 0

🕔15.Mar 2023

தனியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி – பொக்காவல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்கள் நேற்று (14)

மேலும்...
அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார் 0

🕔2.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார். மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம்

மேலும்...
காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம்

காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம் 0

🕔25.Jan 2023

வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த நால்வர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளர். வேன் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டி போட்டுவிட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை

மேலும்...
நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் வரை, தேர்தலை நடத்துவதற்கான பணி முன்னெடுக்கப்படும்: ஆணையாளர் சமன் ரத்நாயக்க

நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் வரை, தேர்தலை நடத்துவதற்கான பணி முன்னெடுக்கப்படும்: ஆணையாளர் சமன் ரத்நாயக்க 0

🕔9.Jan 2023

தேர்தலை ஒத்திவைப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேலையல்ல எனவும், தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி – சட்ட தேவைகளை நடைமுறைப்படுத்துவதே அதன் கடமை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் வரை, தேர்தல்கள் ஆணைக்குழு – தேர்தல் தொடர்பான தனது கடமைகளை முன்னெடுத்துச் செல்லும் என அவர் கண்டியில் நேற்று

மேலும்...
நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள்  03 பகுதிகளில் பதிவு

நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள் 03 பகுதிகளில் பதிவு 0

🕔28.Dec 2022

இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 497 கொலைகளாகும். அதில் 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக மேற்கொள்ளப்பட்டவை என, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்

மேலும்...
தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு

தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு 0

🕔26.Nov 2022

தலதா மாளிகைக்கான மின்சாரக் கட்டணமாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரால் வழங்கப்பட்ட வசதியைப் பயன்படுத்தி இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மின்சாரக் கட்டணப் பிரச்சினை எழுந்ததமையினை அடுத்து, தலதா மாளிகைக்கு 2.7 மில்லியன் ரூபா

மேலும்...
32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டம்; 22 ஆயிரம் பட்டதாரிகள் இணைக்கப்படுவர்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டம்; 22 ஆயிரம் பட்டதாரிகள் இணைக்கப்படுவர்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Nov 2022

இந்த வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை மீண்டும் பிற்போடப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
மஹிந்தவின் வருகையின் போது நாவலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம்: பலர் கைது

மஹிந்தவின் வருகையின் போது நாவலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம்: பலர் கைது 0

🕔16.Oct 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (16) நாவலப்பிட்டிக்கு சென்றிருந்த நிலையில், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்குமாறு இப்போராட்டத்தின்போது அரசாங்கத்துக்கு வலியுறுத்தப்பட்டது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம்

மேலும்...
10 ரொட்டி, ஒரு மென்பான போத்தல்: மாத்தளையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு விலைபோனது

10 ரொட்டி, ஒரு மென்பான போத்தல்: மாத்தளையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு விலைபோனது 0

🕔11.Oct 2022

10 ரொட்டிகளும், ஒரு மென்பான போத்தலும் 10 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விலைபோன சம்பவம் மாத்தளை – பகமுனையாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிராம மரண சங்கமொன்றுக்கு நிதி வழங்கும் வகையில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2021 ஆம் ஆண்டு தோற்றிய மாணவி கே. தினுஷிகா பெனாண்டோ என்பவர் இந்த ஏலத்தை

மேலும்...
கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு

கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு 0

🕔28.Sep 2022

கண்டி – கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சிசிர ரணசிங்க நாணயச் சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களான சமிந்த கருணாரத்ன, ரவிப்பிரிய சமிகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிசிர ரணசிங்க ஆகியோர் இந்தப் பதவிக்கு போட்டியிட்டனர். ஆரம்ப சுற்று வாக்குகளின்

மேலும்...
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சில அதிகாரிகளுக்கு ‘தேவையற்ற’ சலுகைகள்: தான் நிறுத்தியதாக அதன் தலைவர் தெரிவிப்பு

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சில அதிகாரிகளுக்கு ‘தேவையற்ற’ சலுகைகள்: தான் நிறுத்தியதாக அதன் தலைவர் தெரிவிப்பு 0

🕔21.Aug 2022

– முனீரா அபூபக்கர் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவியுள்ள ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். சில அதிகாரிகளுக்கு அரசியல் செய்வதற்காக வழங்கப்பட்ட பல சலுகைகளை தாம் நீக்கியதாகவும் அவர் கூறினார். எனவே சில தொழிற்சங்கங்களும் குழுக்களும் தமக்கு

மேலும்...
கோட்டாபய அரசியலுக்கு மீண்டும் வரும் முடிவை எடுப்பார் என நம்பவில்லை: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய அரசியலுக்கு மீண்டும் வரும் முடிவை எடுப்பார் என நம்பவில்லை: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 0

🕔19.Aug 2022

– முனீரா அபூபக்கர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) கண்டியில் தெரிவித்தார். அப்படியொரு முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார். இன்று

மேலும்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு 0

🕔30.Mar 2022

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மரணமடைந்தமையை அடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக அந்தக் கட்சிக்கு தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் இன்று (30) காலை கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் ஆரம்பித்தது. இதன்போதே செந்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்