Back to homepage

மேல் மாகாணம்

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவருக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் கொடுப்பனவை பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று, அவரின் யூடியூப் சானலில் வெளியாகியுள்ளது. அதில் மேசையொன்றின் மீது 05ஆயிரம் ரூபாய் பணத்தாள்களை பரப்பி

மேலும்...
முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இவர் மீதான ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2010ம்

மேலும்...
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியிலிருந்து அஷ்ரப் ராஜிநாமா

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியிலிருந்து அஷ்ரப் ராஜிநாமா

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து ஏ.பீ.எம். அஷ்ரப் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமாக் கடிதத்தினை கடந்த ஜனவரி 01ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய

மேலும்...
20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

– ஆர். ராம் – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

மேலும்...
மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம்

மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம்

நாட்டிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நப்கீனை இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 06ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள், மாதாந்தம் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் பாடசாலைக்கு வருவதனை தவிர்ப்பதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைக்கு

மேலும்...
உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை

உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை

உக்ரேன் நாட்டில் இருந்து இலங்கைக்கு மேலும் 175 பேர் சுற்றுலாப் பயணிகளாக இன்று சனிக்கிழமை வருகை தந்துள்ளனர். மத்தள விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இவர்கள் வந்திறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே உக்ரேனில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 06 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு

கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு, கொவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என பரிந்துரை வழங்கியுள்ளதாக ‘கொழும்பு டெலிகிராப்’ தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர்கள் குழுவினர், சுகாதார அமைச்சுக்கு இந்த வாரம் மேற்படி பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் பிரகாரம், கொரோனாவினால்

மேலும்...
கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்: பேராசிரியர் நீலிகா அறிவுரை

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்: பேராசிரியர் நீலிகா அறிவுரை

கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ஃப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என, நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமநிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு

மேலும்...
முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்:  பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை

முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை

இலங்கையில் உள்ள 20 சதவீத மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள், இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்; இந்த ஆண்டு கொவிட் -19 தடுப்பூசி குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன்

மேலும்...