Back to homepage

மேல் மாகாணம்

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில் 0

🕔11.Aug 2016

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப வைபவம் இன்று வியாழக்கிழமை, கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு

மேலும்...
ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி 0

🕔11.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பெற்ற கடன்கள் தொடர்பான தகவல்களை, நீதிமன்றில் வெளியிடத் தவறியமை காரணமாக, அவர் வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது மனைவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், தன்னை

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔11.Aug 2016

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமூலம், இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கபட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்ததோடு, கட்சித் தலைவர்களின்

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...
சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔10.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி விசாரணை பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் சீ.எஸ்.என். நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔9.Aug 2016

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார். இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது 0

🕔8.Aug 2016

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க

மேலும்...
பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ் 0

🕔8.Aug 2016

பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெலிஅத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.சுமார் 40 வயதான பெண்ணொருவர், இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்தபோது, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, காயமடைந்த அவர், வெலிஅத்த – ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.காணிப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...
பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை 0

🕔8.Aug 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்க

மேலும்...
புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு

புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு 0

🕔7.Aug 2016

புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார். சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவைப் பகுதிகளிலேயே, இந்த நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன

மேலும்...
உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம் 0

🕔6.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்களின் உரித்து, அவற்றின் வருமானங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைமையகம், மற்றும் சொத்துக்களை தலைவர் ஹக்கீம், தனதும் தனக்கு விருப்பமானவர்களின் பெயர்களிலும் மாற்றி எழுதிக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔6.Aug 2016

நடைமுறையிலுள்ள உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்த கடிதம்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔5.Aug 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அரசாங்க வாகனத்தை திருப்பிக் கையளிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பியசேனவை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக்கியபோது, அவரை

மேலும்...
மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது

மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது 0

🕔5.Aug 2016

மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் மத்திய குழு, நேற்று வியாழக்கிமை தீர்மானித்தமையினையடுத்து, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த

மேலும்...
பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔5.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்