Back to homepage

மேல் மாகாணம்

தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன்

தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன் 0

🕔6.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால அறிக்கையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்திருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை,  நாடாளுமன்ற

மேலும்...
மஹிந்த வீட்டில் நுழைந்தவர், மன நலம் பாதிக்கப்பட்டவர்; நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

மஹிந்த வீட்டில் நுழைந்தவர், மன நலம் பாதிக்கப்பட்டவர்; நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு 0

🕔6.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பு வீட்டினுள் பலாத்காரமாக கத்தியுடன் நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்ட நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என, ,இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பில் உள்ள வீட்டிற்குள் கடந்த 21ம் திகதி நுழைய முற்பட்ட இளைஞரை, கறுவாத் தோட்ட பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து, சந்தேகநபர் கொழும்பு

மேலும்...
அமைதிக்கான நோபல் பரிசு; வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்

அமைதிக்கான நோபல் பரிசு; வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார் 0

🕔6.Oct 2017

அமைதிக்கான இந்த ஆண்டுக்குரிய நோபல் பரிசு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அணு ஆயுதங்களை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச பிரசார அமைப்புக்கு (International campaign to abolish nuclear weapons – ICAN) வழங்கப்படும் என்று உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் மேற்படி அமைப்பு,

மேலும்...
ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் 0

🕔6.Oct 2017

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பாலியல் தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது, உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை சான்றுப் பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, நாட்டிலுள்ள பொலிஸார் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றில்

மேலும்...
எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி

எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி 0

🕔5.Oct 2017

இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி) ஒருதலைப்பட்சமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தாலும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதுள்ள விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விற்பனை செய்யும் என்று, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதனால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார். எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, ஐ.ஓ.சி.

மேலும்...
கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம்

கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –இருபதாவது திருத்தத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்ற காரணத்தினால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டது. இது தெரியாதவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தத்துக்கு கைதூக்கிவிட்டதாக பேசிக்கொண்டு திரிகின்றனர் என,

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம்

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம் 0

🕔5.Oct 2017

வடக்கு கிழக்கு இணைப்பை, தான் எதிர்ப்பதாகவும், கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறியிருப்பது, அவருடைய சொந்தக் கருத்தாகும் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்ததோடு, சில நாட்களுக்கு

மேலும்...
வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும்

மேலும்...
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது 0

🕔4.Oct 2017

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க

அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க 0

🕔3.Oct 2017

இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளை மூன்றாவது நாடொன்று அனுப்பி விடுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் என, மொத்தம் 1333 பேர் உள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் பாதுகாப்பின் கீழ் இவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மேலும்...
500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை

500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔3.Oct 2017

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தினுடைய நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் அமைச்சரால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும்,  நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக இதன்போது கூறினர்.

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல 0

🕔3.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் பிக்குகள் உள்ளிட்ட குழுவின் குழப்பம் விளைவித்தபோது, பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் தனக்கு திருப்தியில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை அலறி மாளிகையில் சந்தித்தபோதே,

மேலும்...
புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு 0

🕔2.Oct 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையொன்று அமுலுக்கு வரவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒருமித்த நாடு என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்