Back to homepage

மேல் மாகாணம்

பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல்

பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல் 0

🕔7.Jan 2018

பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்க அவருடைய பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்னராகவே அவர் இதனைச் செய்ய வேண்டுமெனவும் அவர்  கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், அவர்களின் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். மத்திய

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 07 பேர் கைது 0

🕔7.Jan 2018

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 06 பெண்களும், விபசார நிலையத்தை நடத்திய ஆண் முகாமையாளர் ஒருவரும் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மசாஜ் நிலையம் எனும் பெயரில் காலி வீதி, ரத்மலான பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 22 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

மேலும்...
சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ 0

🕔6.Jan 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வொன்றில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இலங்கையின் பிரபல்யமான மூத்த சிங்கள நடிகையான ஐரங்கனி சேரசிங்கவுடன் இணைந்து மேற்படி வீடியோவில் பிரதமர் நடமாடுகின்றார். நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு ரணில் விக்ரமசிங்க மருமகன் முறையானவராவார். அரசியல்வாதிகளில் எப்போதும் கவனிப்புரிய ஒருவராகவும், ஊடகங்களின் கூர்மையான

மேலும்...
சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்

சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார் 0

🕔6.Jan 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தமது சொத்து மற்றும் வருமானங்கள் பற்றி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயற்படும் காரியாலயங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று,

மேலும்...
ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி

ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி 0

🕔5.Jan 2018

தூர சிந்தனையுடனும் பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்களை திறந்துவைக்கும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றிகரமாக நிறைவு பெறும் என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அதன் பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக, சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும்

மேலும்...
மக்காவிலிருந்து தங்க நகை கடத்திய கல்முனை நபர், விமான நிலையத்தில் சிக்கினார்

மக்காவிலிருந்து தங்க நகை கடத்திய கல்முனை நபர், விமான நிலையத்தில் சிக்கினார் 0

🕔5.Jan 2018

சஊதி அரேபியாவின் மக்கா நகரிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைதானவர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவராவார். இவர் நேற்று  வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் கொண்டுவந்த பயணப் பொதியில் இருந்து 814.16 கிராம் நிறையுடைய தங்க

மேலும்...
ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு

ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு 0

🕔5.Jan 2018

வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்களுக்கு சுற்று நிருபம் ஒன்றினூடாக இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பின்னர், வீடு வீடாகச் சென்று

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல் 0

🕔4.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவனப் பணியாளர்களை, அவர்களின் ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்துவதாக, தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔4.Jan 2018

பெரிய கட்சிகளிடம் இரு தடவை எங்களது வாக்குளை அடகு வைத்து நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம். அதை தொடர்ந்தும் செய்யமுடியாது. எனவேதான்  மினுவாங்கொட பிரதேச சபையில் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.மினுவாங்கொட பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கள்ளொளுவை ஹிஜ்ரா வீதியில்

மேலும்...
பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க தொடர்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்பு கொள்வதற்காக, அவரின் வீட்டு தொலைபேசிக்கு ஊடகமொன்று அழைப்பினை மேற்கொண்டபோது, ரவியின் சட்டத்தரணி பதிலளித்தார். ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் மத்திய

மேலும்...
மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை

மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை 0

🕔3.Jan 2018

தேர்தல் வருவதால் வசிம் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மிக விரைவில் மேடை ஏறுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தனை காலம் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபிக்காது, பாமர மக்களைப் போன்று, எம் மீது போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கியவாறு, ஆட்சியாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை

மேலும்...
பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார்

பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார் 0

🕔3.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு, ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் பிணை முறி மூலம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மொத்தமாக, சுமார் 1150 கோடி ரூபாய் உழைத்துள்ளது என, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கை

மேலும்...
நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம் 0

🕔3.Jan 2018

நாட்டில் கடந்த வருடம் 332.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி 990 கோடி ரூபாயாகும். போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் இவற்றினைக் கைப்பற்றியிருந்தனர். மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் 29,690 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 36 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,

மேலும்...
பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு

பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு 0

🕔3.Jan 2018

அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி, கொழும்பில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல்மாாகண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 1500 ரூபாய் வீதம் வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில், காணிச் சீர்திருத்த அதிகார சபையினால் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. இம்மாதம்

மேலும்...
இலங்கையில் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர்: டொக்டர் சிசிர லியனகே தகவல்

இலங்கையில் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர்: டொக்டர் சிசிர லியனகே தகவல் 0

🕔3.Jan 2018

இலங்கையில் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதியினரில், ஆண் ஓரின சேர்க்கையாளர்களே அதிகம் உள்ளனர் என்று, தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்ட பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கையில் சுமார் 7500 ஓரின சேர்க்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் 12 லட்சம் பேரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்