Back to homepage

மேல் மாகாணம்

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கியமையினை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து குறித்த வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை சிலர் கொள்ளையிட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் 15 பேரையே பொலிஸார்

மேலும்...
இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். சீன நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் செயலாளர் பென் புன்ச்டி, இந்த நிதியுதவியை நேற்று சனிக்கிழமை வழங்கினார். மேற்படி நன்கொடையானது – இலங்கை நாணயப் பெறுமதியில் இது

மேலும்...
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யக் கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் மழை

மேலும்...
நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. மேற்படி விமானங்கள் இன்று சனிக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கின. ஜப்பானிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான போர்வைகள், நீர் தாங்கிகள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மற்றும் மின் பிறப்பாக்கிகள் போன்றவை – குறித்த விமானத்தில் அனுப்பி

மேலும்...
வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேசத்தில்  இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், இன்று சனிக்கிழமை காலை மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த நிலையில்,  இங்குள்ள வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் வீதிகளில் அலைமோதிய வண்ணம் உள்ளனர். இந்தப் பிரதேசத்தில் தண்ணீர் மட்டம் குறைந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இதேவேளை, மெகொட கொலன்னாவ

மேலும்...
540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறிய குற்றங்களைப் புரிந்து சிறைத் தண்டனைகளைஅனுபவித்து வருகின்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களத்தின் பேச்சாளர் ரி.என். உப்புள்தெனிய  தெரிவித்தார்.

மேலும்...
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, சேவையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, சேவையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, அவரின் பதவியிலிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதவான் திலின கமகே, சட்டவிரோதமாக தன்வசம் யானையொன்றை வைத்திருந்தார் என்று, சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, நீதிச் சேவை ஆணைக்குழு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேற்படி இடைநிறுத்தம் தொடர்பாக திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, நீதிச் சேவை ஆணைக்குழு தரப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும்...
தாஜுத்தீன்  கொலையுடன் தொடர்புடைய MP களின் பெயர்களை வெளியிட வேண்டிவரும்; பிரதமர் தெரிவிப்பு

தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புடைய MP களின் பெயர்களை வெளியிட வேண்டிவரும்; பிரதமர் தெரிவிப்பு

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். நிதிக்குற்றப் புலனாய்வுப்

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையில், வெள்ள நிவாரணப் பணி

மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையில், வெள்ள நிவாரணப் பணி

– ஷபீக் ஹூசைன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான கட்சிக் குழுவினர் – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் பணியில் இன்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். ஹக்கீம் தலைமையிலான குழுவினர் – களனி கங்கையின் இரு மருங்கிலும் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்