Back to homepage

மேல் மாகாணம்

சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை

சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை 0

🕔4.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு 0

🕔3.Apr 2024

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் – வறுமை புதிதல்ல

மேலும்...
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல் 0

🕔3.Apr 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்துள்ள நிலையில், அவர்களை தடுத்து வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து

மேலும்...
நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு

நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔3.Apr 2024

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு – தான் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்கள் தொடர்பில், நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (03) தனது சட்ட ஆலோசகர் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையின் ஊடாக அவர் இதனைக்

மேலும்...
கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔3.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி தாக்கல் செய்த – மறுசீராய்வு மனுவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் ஆட்சேபித்தமையினை அடுதது, கெஹலியவின் பிணை விண்ணப்பம் – மார்ச் மாதம் முதன்முறையாக நிராகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரின் மகள் சமிந்திரி ரம்புக்வெல்ல, தனது தந்தையை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்குமாறு கோரி

மேலும்...
மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை  அனுமதி

மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Apr 2024

அரச பாடசாலைகளிலுள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை வழங்கும் திட்டமொன்று இம்மாதம் ஆரம்பமாகிறது. இதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் மொத்தம் 04 மில்லியன் பேர் அரச பாடசாலைகளில் கற்கின்றனர். அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பூப்படைந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும்

மேலும்...
ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔2.Apr 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் – நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஞானசார தேரருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே – மேற்படி கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

மேலும்...
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம் 0

🕔2.Apr 2024

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டப்ளியு.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 2023 டிசம்பரில் ஜனாதிபதி லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு மூன்று நியமனங்களை வழங்கினார். ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.

மேலும்...
காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார்

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார் 0

🕔1.Apr 2024

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக, இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக, பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான காசோலையை – இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி 0

🕔1.Apr 2024

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கீழ் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜுலை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஜூலை மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக –

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔1.Apr 2024

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை – கட்சியில் அவர்கள் வகித்த பதவிகளில்

மேலும்...
எரிவாயு விலை இன்று குறைகிறது

எரிவாயு விலை இன்று குறைகிறது 0

🕔1.Apr 2024

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் குறைவடையவுள்ளது என, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 135 ரூபாயினால் குறைவடைகிறது. இதற்கிணங்க அதன் புதிய விலை 4,115 ரூபாயாக இருக்கும். 05 கிலோ எரிவாயுவின் விலை 55 ரூபாயினால் குறைந்து, புதிய சில்லறை விலை 1,652 ரூபாயாக

மேலும்...
எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு 0

🕔1.Apr 2024

எரிபொருட்களின் விலை இன்று (01) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாயாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்

மேலும்...
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள் 0

🕔31.Mar 2024

– முனீரா அபூபக்கர் – வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 06ஆம் திகதி – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட

மேலும்...
சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம் 0

🕔30.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர்  லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் – செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்