Back to homepage

தென் மாகாணம்

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது 0

🕔13.Jun 2021

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு மேற்படி ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படை,

மேலும்...
மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி 0

🕔17.May 2021

ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான பௌத்த பிக்கு, மாத்தறை வைத்தியசாலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என, வெலிகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகமை – கொவியாபான,

மேலும்...
சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல்

சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல் 0

🕔7.May 2021

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என, சிங்கள ஊடகம் லங்கா சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறைத்தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்க கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பேசப்படுகிறது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டதை

மேலும்...
ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔14.Apr 2021

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, எதிர்க்கட்சி தலைவர் இதனைக் கூறினார்.

மேலும்...
வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம்

வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம் 0

🕔5.Apr 2021

வெள்ளைக் கோட்டில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில், பாதசாரியொருவர் மரணமடைந்துள்ளார். மாத்தறை – திஹகொட பிரதேசத்திலுள்ள பண்டந்தர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் ஒருவரை ஏற்றிக் கொண்டு – மாத்தறை நீதவான் நீதிமன்றுக்குச் சொன்று கொண்டிருந்த திஹகொட பொலிஸ் நிலையத்துக்குரிய ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியது. இறந்தவர் திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...
10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல்

10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔28.Mar 2021

நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகையான 22 மில்லியன் பேரில் 18 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டில் வசித்து

மேலும்...
பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை

பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை 0

🕔11.Mar 2021

சிறைத்தண்டனை அனுபவத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார். அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, அவருடன் படம் (செல்ஃபி) எடுத்திருந்தார். இந்நிலையில், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் ஒழுக்காற்று நிலையத்திற்கு  இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க

மேலும்...
ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔9.Mar 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் படம் எடுத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவை அனுமதித்த சிறைக்காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பணிபுரிந்த சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை

மேலும்...
தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516 0

🕔22.Feb 2021

நீதித்துறை அவமதிப்பு குற்றத்துக்காக 04 வருட கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள அவர், இனி கைதி – என் (N) 12516 என அழைக்கப்படுவார். எவ்வாறாயினும் சிறைசிலுள்ள சக கைதிகளால் ரஞ்சன் ராமநாயக்க மிகவும்

மேலும்...
ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்

ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார் 0

🕔20.Feb 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில்

மேலும்...
103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம்

103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம் 0

🕔8.Feb 2021

கொரோனா தொற்று காரணமாக 103 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது. காலி – கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிசிஆர் பரிசோதனை

மேலும்...
தனிமைப்படுத்தலை முடித்த ரஞ்சன், சிறைச்சாலைக்கு மாற்றம்

தனிமைப்படுத்தலை முடித்த ரஞ்சன், சிறைச்சாலைக்கு மாற்றம் 0

🕔26.Jan 2021

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொலபெலச சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பிலுள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததால் இவர் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். நீதித்துறை வழக்கில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. தொடர்பான செய்தி: ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய

மேலும்...
21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு

21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு 0

🕔21.Jan 2021

காலி புகையிரத நிலையத்துக்கு உரித்தான உத்தியோகபூர்வ வீட்டு வளவிலிருந்து தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டு வளவிலிருந்த மரங்களில் இருந்து 21 தேங்காய்களை சந்தேக நபர் திருடியதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர் நேற்று புதன்கிழமை

மேலும்...
இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது

இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது 0

🕔27.Dec 2020

இரண்டு தலைகளைக் கொண்ட ஆமைக் குஞ்சு ஒன்று, ஹிக்கடுவ – திராணகம பகுதியில் நேற்று பிரதேசவாசிகளிடம் சிக்கியது. குறித்த பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதியில் ஆமைகள் இட்ட முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளில் ஒன்றே இது என கூறப்படுகிறது. மேற்படி ஆமைக் குஞ்சுக்கு இரண்டு தலைகளும், 06 கால்களும் உள்ளன. குறித்த ஆமைக் குஞ்சை – ஹிக்கடுவ வனஜீவராசிகள் திணைக்கள

மேலும்...
கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Dec 2020

கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிக்காமல், பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவினால் மரணித்த 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் குடும்பத்தவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்