Back to homepage

தென் மாகாணம்

புதிய கட்சி ஆரம்பித்தால், ரகசியங்கள் வெளியிடப்படும்: ஜனாதிபதி எச்சரிக்கை

புதிய கட்சி ஆரம்பித்தால், ரகசியங்கள் வெளியிடப்படும்: ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔19.Aug 2016

எம்மை கவிழ்ப்பதற்கு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகின்றார்களாம். அதன் பின்னர் வீதியில் செல்ல முடியாத நிலையே அவர்களுக்கு ஏற்படும். இதுவரைக்காலமும் வெளிவராத பல ரகசியங்கள்  வெளியிடப்படும். அப்போது அவர்களின் தேசப்பற்று சாயம் கரைந்து விடும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று  வெள்ளிக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு

மேலும்...
என்னை தேசத் துரோகி என்கிறார்கள்; பிரபாகரனுக்கு நான் பணம் வழங்கவில்லை: பிரதமர் ரணில்

என்னை தேசத் துரோகி என்கிறார்கள்; பிரபாகரனுக்கு நான் பணம் வழங்கவில்லை: பிரதமர் ரணில் 0

🕔19.Aug 2016

திருடர்களை விரட்டி விட்டு, நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் தன்னை தேசத்துரோகி என்று சிலர் கூறுவதாகவும், பிரபாகரனுக்கு பணம் வழங்கி, தேர்தலில் தான் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேசத்திடம் கடன்களை பெற்றுக்கொண்டு,  நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்க முடியாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தை தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர்

மேலும்...
உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து

உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து 0

🕔13.Aug 2016

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மூவர், கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கத்திக் குத்துச் சம்பவம் இன்று மதியம் அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாணவர்கள் மீது, இரண்டு நபர்கள் – இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். கத்திக் குத்துக்கு இலக்கான மூன்று

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0

🕔3.Jul 2016

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை – திக்வெல்ல நாவரஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது, இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 48 வயதுடைய வில்சன் விக்கிரமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ரதம்பல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம்

சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம் 0

🕔19.May 2016

இளைஞர் ஒருவரை கடத்தி, பலவந்தமாக  திருமணம் செய்து கொள்ள முயச்சித்த குற்றச்சாட்டில், யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கு வயது 23 என்றும், கடத்திய யுவதிக்கு 25 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையில் நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. ராணுவ வீரரொருவர் உள்ளிட்ட 06பேரை கொண்ட குழுவுடன் மூன்று முச்சக்கர வண்டியில் வந்த யுவதி – மேற்படி

மேலும்...
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் ஆஜர் செய்யப்பட்டபோது, கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது. 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், பஷில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டிற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பஷில் ராஜபக்ஷவின் கடவுச்

மேலும்...
ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை 0

🕔13.Apr 2016

ஈழத்தைஉருவாக்க வடமாகாண சபை எதிர்காலத்தில் முயற்சிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் வடமாகாண சபை முன்வைக்கும் யோசனைகளைப் பார்க்கும் போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், மாகாணங்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் எந்தவொரு மாகாண சபைக்கும்அதிகாரம் கிடையாது என்றும் முன்னாள்

மேலும்...
கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது 0

🕔2.Apr 2016

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில்பயணித்த கப்பலொன்றிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்திய போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. இதன்போது, கப்பலில் இருந்த 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ்

மேலும்...
தங்க வேட்டை: மேஜர் நெவிலின் காணியை, தோண்டும் படலம் தொடர்கிறது

தங்க வேட்டை: மேஜர் நெவிலின் காணியை, தோண்டும் படலம் தொடர்கிறது 0

🕔27.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராய்ச்சிக்கு சொந்தமான, ஹம்பாந்தோட்டை – மெதமுலன பகுதியியிலுள்ள காணியை, தோண்டும் நடவடிக்கை இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் காணியில் தங்கம் மற்றும் பணம் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, மேற்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பணியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔16.Feb 2016

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த இருவரும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை

மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை 0

🕔12.Feb 2016

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 3000 மெற்றிக் தொன் நெல், அடுத்த 03 வாரங்களுக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என்று, நெற் சந்தைப்படுத்தும் சபை நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது. மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லில், 509  மெற்றிக் தொன் நெல் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டுள்ளதாகவும் நெற் சந்தைப்படுத்தும் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய நிறுவனமொன்று

மேலும்...
கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை

கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை 0

🕔6.Feb 2016

அரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய வேண்டுதலுக்காகவே, இந்தத் தேங்காய்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தென்னந் தோட்டத்திலிருந்து சுமார் 700 தேங்காய்கள் பறிக்கப்பட்டு, அவை உழவு இயந்திரமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்கள்

மேலும்...
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேங்காய் உடைத்து வேண்டுதல்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேங்காய் உடைத்து வேண்டுதல் 0

🕔6.Feb 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சனிக்கிழமை காலி மாவட்டம் சீனிகம விகாரையில் தேங்காய்களை உடைத்து வேண்டுதலில்  ஈடுபட்டனர்.நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவினை கலைக்குமாறு இவர்கள் இவர்கள் தேங்காய்களை உடைத்தனர்.ஒன்றிணைந்த எதிர்க் கட்சியியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உள்ளிட்டவர்களும் இந் நிகழ்வில் கலந்து

மேலும்...
தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை

தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை 0

🕔5.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவை, முன் பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாண முதலமைச்சர் இன்று நீதிமன்றில் ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமை காரணமாக, தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்திருந்தார். கடந்த ஜனாதிபதி

மேலும்...
தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கொன்று இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ப்பட்டபோது, அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே நீதவான் நிலுபுலி லங்காபுர மேற்படி பிடியாணையினைப் பிறப்பித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்