Back to homepage

தென் மாகாணம்

கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம்

கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம் 0

🕔16.Mar 2024

கடமை தவறினார்கள் எனும் குற்றசாட்டில், அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘சமன் கொல்ல’ என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பில் பொலிஸ் அவசர

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0

🕔1.Mar 2024

அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக இன்று (01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதஆயுததாரிகள் – துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ள்னர். சந்தேக

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது 0

🕔16.Feb 2024

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த சந்தேகத்தின் பேரில், 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 2017 ஆம் ஆண்டு முதல்

மேலும்...
பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர் 0

🕔5.Feb 2024

‘அபே ஜன பல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட 05 பேர் பெலியத்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் – சந்தேகநபர் நேற்று (04) ஹபராதுவவில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...
18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம் 0

🕔30.Jan 2024

மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும் மாபலகம என்பவர் தனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். காலி நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி லிமிடெட்’

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு 0

🕔25.Jan 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச்

மேலும்...
‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது 0

🕔24.Jan 2024

பெலியத்த பகுதியில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே மாத்தறையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகபரே குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட ஜீப் ரக வாகனத்தை

மேலும்...
அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔22.Jan 2024

‘அபே ஜனபல கட்சி’ தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 05 பேர், இன்று (22) தங்காலை – பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபல பௌத்த பிக்குகளான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொடத்தே ஞானசார தேரர் ஆகியோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சமன் பெரேராவின் ‘அபே ஜனபல

மேலும்...
காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு

காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு 0

🕔19.Jan 2024

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2024.01.16ஆம் திகதி மேற்படிஅரபுக்கல்லூரியில் கற்கும் மாணவர் ஒருவரை, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கிய விடயம், திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்

மேலும்...
300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு 0

🕔5.Jan 2024

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 278 பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 06 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை

மேலும்...
அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை

அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை 0

🕔27.Dec 2023

கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் எடைகொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (27) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் நிறை

மேலும்...
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0

🕔15.Nov 2023

லுனுகம்வெஹர தேசிய பூங்காவில் இன்று (15) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும்...
பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔12.Oct 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய (assembling) குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான் இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளார். இதன்படி, அவர் தலா 05 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும், 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,

மேலும்...
முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல்

முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல் 0

🕔14.Sep 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுபினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி பிரதான நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய சம்பவம் தொடர்பில் இவரை விளக்க மறியலில் வைப்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்