Back to homepage

Tag "பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு"

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்கு 07 பேர் விண்ணப்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்கு 07 பேர் விண்ணப்பம் 0

🕔12.Mar 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு 07 பேர் விண்ணப்பத்துள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனால், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் – பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், உபவேந்தர் பதவிக்குரிய விண்ணப்பங்களுக்கான

மேலும்...
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம்

பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம் 0

🕔15.May 2023

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பதவி வகித்தவர்கள், ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகிய பின்னர் தம்மை பேராசிரியர் என அழைத்துக் கொள்ள முடியாது என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ‘கோப்’ எனப்படும் நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

மேலும்...
பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி

பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி 0

🕔26.Oct 2021

பல்கலைக்கழகங்களை நொவம்பர் முதலாம் திகதி தொடக்கம், பல கட்டங்களாக மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நொவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தத் திகதியில் திறப்பது என்பது குறித்த அதிகாரம், உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தின் கீழ்,

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது 0

🕔21.Sep 2021

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர். அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்துக்கு

மேலும்...
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம்

பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2021

பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையயு வழங்கி பல்கலைகழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்

மேலும்...
பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு 0

🕔9.Jun 2021

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 11ஆம் திகதி, விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி: வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக

மேலும்...
வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்

வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம் 0

🕔9.Jun 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்:  ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு 0

🕔27.Mar 2021

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக மூன்று விண்ணப்பதாரிகளை ஜனாதிபதிக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 07 பேராசிரியர்கள் மற்றும் 04 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் அப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம் 0

🕔16.Feb 2021

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் ஆணையாளருக்கு பரிந்துரை விடுத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் பல்மருத்துவ பீடங்களில் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் 5,800 க்கும் மேற்பட்ட

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 0

🕔8.Jan 2021

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் இருவர், கொவிட் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டமையைத் தொடர்ந்து அந்த ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசோதனை மேற்கொண்டபோது, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியானதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் நேரடி தொடர்புகளாக

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔31.Oct 2020

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார். கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். இதற்கமைவாக

மேலும்...
பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை 0

🕔23.Oct 2020

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் (Online) விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில், இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார். தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்வனவுக்காக கடன் வசதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்வனவுக்காக கடன் வசதி 0

🕔21.Sep 2020

பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபா சலுகை கடன் திட்டத்தின் கீழ் – மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர்

மேலும்...
கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம்

கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம் 0

🕔5.Sep 2020

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப் படிப்புக்குரிய புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்வுக்கு உட்படுத்தவும் புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காகவும் புதிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். இதேவேளை, சில பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப் படிப்புக்காக பதிவு செய்துள்ள மாணவர்களின்

மேலும்...
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 0

🕔16.Aug 2020

பல்கலைக்கழகங்கள் அனைத்தும், வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். பின்பற்றப்பட வேண்டிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்