Back to homepage

Tag "தென்கிழக்குப் பல்கலைக்கழகம்"

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத் 0

🕔11.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அரபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன கொடியை சால்வையாக அணிந்து நின்றமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. யஸீர் அரபாத் – தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில், இரண்டு நாட்களும் தலா 03 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலாவது நாளின்

மேலும்...
புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம் 0

🕔12.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காரணமாக, அதன் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக இம்மாதம் 16ஆம் திகதி வரை – கல்வி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று (12) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம்

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன 0

🕔11.Jan 2024

– எம்.என்.எம். அப்ராஸ் –  தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகமும் நீரில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் 0

🕔28.Jun 2023

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – தன் மீது சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்வு கொண்ட மிகச் சிலர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தமது சட்ட மீறல்களையும் ஊழல்களையும் மறைக்க முயற்சிப்பவர்களே, தன்மீது இவ்வாறான

மேலும்...
இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு

இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 0

🕔2.Feb 2023

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்தை மீண்டும் தாங்கள் தக்கவைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின்படி – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு, இந்த வரிசைப்படுத்தலை ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
மிச்சச்  சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ

மிச்சச் சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ 0

🕔22.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர், முதலாமாண்டு மாணவியொருவருக்கு பாலியல் சேட்டை விட்டதையடுத்து, தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு ‘நடத்தை கெட்டவள்’ என்கிற முத்திரையை குத்தும் நடவடிக்கைகளில், விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கும் கோஷ்டியினர் ஈடுபட்டு வருகின்றமையை அவ்வப்போது காண முடிகிறது. அவற்றில் ஓர் அங்கமாக, தற்போது – அந்த

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் 0

🕔18.Jan 2022

– ஆசிரியர் கருத்து – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் அங்குள்ள மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை பாலியல் தொந்தரவு கொடுத்த விரிவுரையாளரைக் காப்பாற்றும் பொருட்டு,

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மரணம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மரணம் 0

🕔14.Oct 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் இன்று காலமானார். அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் பேருவளையை சொந்த இடமாகக் கொண்டவராவார். இவரின் மறைவு தொடர்பில் தென்கிழக்குப் பலகலைக்கழகம் தனது இரங்களை வெளிட்டுள்ளது. மேலும், பல்வேறு தரப்பினரும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா 0

🕔25.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழக

மேலும்...
பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0

🕔23.Feb 2021

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த

மேலும்...
தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார்

தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார் 0

🕔19.Jun 2019

– கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர், அரசியல் விஞ்ஞானத் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) – (சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம். அஹமது லெப்பையின் நினைவுக் கூட்டம், இன்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதன்போது கலாநிதி பாஸில் ஆற்றும் சொற்பொழிவின் எழுத்து வடிவம் இது) ‘ஒரு கல்வியியலாளனின் வாழ்க்கை சந்தோஷம், துக்கம், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔6.Feb 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு 2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. உதவிப்பதிவாளர் எஸ். அர்ச்சனாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த  நிகழ்வில், பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன்

மேலும்...
தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔24.Jan 2019

தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்களை  பெப்ரவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி மாணவர்களை கைது செய்த ஹொரவபொத்தான பொலிஸார், கெட்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்தனர். குறித்த புகைப்படங்களை, மேற்படி மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களிடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்