Back to homepage

Tag "சமையல் எரிவாயு"

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை 0

🕔12.Mar 2022

லிட்ரோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று (12) பல பகுதிகளுக்கு எரிவாயுவை விநியோகித்தது. இருப்பினும், சில பகுதிகளில், எரிவாயு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. நேற்றும், இன்றும் சுமார் 200,000

மேலும்...
சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல் 0

🕔3.Mar 2022

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால்

மேலும்...
எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார்

எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார் 0

🕔21.Dec 2021

எரிவாயு கொள்கலனின் செறிமானம் மாற்றப்பட்டமையே, எரிவாயு அடுப்புகள் வெளித்தமைக்கு அடிப்படை காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், எரிவாயு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனைக் கூறியுள்ளார். செறிமானம் மாற்றப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல் நிலைமை, இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு

மேலும்...
நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது

நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது 0

🕔4.Dec 2021

சமையல் எரிவாயுவை சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிற்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. நேற்று முன்தினம் (2) காலை தொடக்கம், மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம்

மேலும்...
சமையல் எரிவாயு விற்பனை: லிற்ரோ நிறுத்தம், லாஃப்ஸ் தொடரும்

சமையல் எரிவாயு விற்பனை: லிற்ரோ நிறுத்தம், லாஃப்ஸ் தொடரும் 0

🕔3.Dec 2021

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக ‘லிற்ரோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (2) காலை தொடக்கம் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு தரம் பற்றிய தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ்

மேலும்...
சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு

சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு 0

🕔30.Nov 2021

சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க விசேட குழுவொன்றினை ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின் தலைமையில் 8 பேரடங்கிய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ

மேலும்...
சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு

சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔29.Nov 2021

சிலின்டரில் உள்ள மையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது. இது ஒரு பாரதூரமான பிரச்சினை

மேலும்...
எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு 0

🕔20.Nov 2021

எதிர்வரும் வாரத்துக்குள் 08 லட்சம் எரிவாயு சிலின்டர்கள் உள்ளூர் சந்தைக்கு வரும் லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியதன் காரணமாக, உள்ளூர் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் ஊடாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்நாட்டு எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர்

மேலும்...
‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு

‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு 0

🕔2.Nov 2021

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு விலையை

மேலும்...
முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு 0

🕔19.Oct 2021

உற்பத்தி விலையை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோழி முட்டை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதும் கூட 22 ரூபாவுக்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது. குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த

மேலும்...
லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு

லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு 0

🕔11.Oct 2021

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 05 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை: லாஃப் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை: லாஃப் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு 0

🕔12.Sep 2021

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடி; எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய

மேலும்...
சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம்

சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம் 0

🕔22.Aug 2021

சமையல் எரிவாயுவை நாளை முதல் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர், லிற்றோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது குறித்த நிறுவனங்கள் வசமுள்ள கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அவதானித்தனர். இதன்படி எதிர்காலத்தில்

மேலும்...
சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது

சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது 0

🕔12.Aug 2021

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் சமையல் எரிவாயு தயாரிக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை வழங்குவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிவாயுவில் கிட்டத்தட்ட 05

மேலும்...
சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி

சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி 0

🕔12.Aug 2021

லாஃப் சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 363 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் சிலிண்டர் 1856 ரூபாவுக்கும், 05 கிலோகிராம் சிலிண்டர் 743

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்