Back to homepage

Tag "கிளிநொச்சி"

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔28.Jun 2023

நபர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் – காரில் பயணித்த 28வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு

மேலும்...
கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை – பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்

மேலும்...
அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Oct 2021

ஐந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் சமைத்துக் கொண்டிருந்த போது, தொல்லை கொடுத்த மகளுக்கே, இவ்வாறு சந்தேக நபரான தாய் சூடு வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில்

மேலும்...
கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல்

கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல் 0

🕔16.Jan 2019

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் ‘சசொச’வினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார்.“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை

மேலும்...
வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம்

வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம் 0

🕔22.Dec 2018

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு  பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை  வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே,  பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு இம்மாவட்டங்களில் 

மேலும்...
பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம்

பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம் 0

🕔10.Dec 2018

– பாறுக் ஷிஹான் –  க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபரொருவர், மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திலேயே இந்த ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரத்துக்கு அண்மையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவருக்காக இந்த ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்தவர், 30

மேலும்...
ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு 0

🕔28.Apr 2018

கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும்...
போலி வாக்குச் சீட்டுகளை பகிர்ந்த, பெண் வேட்பாளர் கைது

போலி வாக்குச் சீட்டுகளை பகிர்ந்த, பெண் வேட்பாளர் கைது 0

🕔27.Jan 2018

போலியான வாக்குச் சீட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்த பெண் வேட்பாளர் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். கரைச்சி பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் மேற்படி பெண் வேட்பாளர், நேற்றைய தினம் – தபால் மூல வாக்காளர்களுக்கு போலி வாக்குச் சீட்டுக்களை வழங்கிக் கொண்டிருந்த போது கைதானார்.

மேலும்...
புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு

புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு 0

🕔24.Nov 2017

எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இடத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், தனக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இடத்தினைப் புனரமைப்பதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி

மேலும்...
சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில்

சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில் 0

🕔2.Nov 2017

சட்ட விரோத மதுபான பாவனை, இலங்கையில் 30 தொடக்கம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் பிரிவு நடத்திய கணக்கெடுப்பு ஒன்றிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மதுபானச் சந்தையில் 49 வீதமானவை சட்டவிரோத மதுபானமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. அந்த வகையயில் நுவரெலியா, புத்தளம், கேகாலை, மொனராகல, பதுளை

மேலும்...
அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔26.Jan 2017

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் முஸ்லிம் ஆசிரியை ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டினை புதன்கிழமையன்று, கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசியை மேற்கொண்டார்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில்;‘கிளிநொச்சி

மேலும்...
வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம்

வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.Aug 2016

– பாறுக் ஷிஹான் – வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டனர். முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள், சுலோகங்களுடன், மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

மேலும்...
கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம்

கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம் 0

🕔13.Aug 2016

கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கிளிநொச்சி – தருமபுரம்

மேலும்...
பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு

பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு 0

🕔1.Jul 2016

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 04 ஆர்.பி.ஜி. குண்டுகளை – குண்டு செயலிழக்கும் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மீட்டனர்.பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பகுதியில் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்போது, 04 ஆர்.பி.ஜி. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு

மேலும்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது 0

🕔30.Mar 2016

சாவகச்சேரி –  மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.மறவன்புலோ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்