Back to homepage

Tag "அலுகோசு"

அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம்

அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம் 0

🕔30.Jun 2019

அலுகோசு பதவிக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தமைக்கு இணங்க, அமெரிக்க பிரஜை உட்பட 100 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்பட்ட பயிற்சி மற்றும் பரீட்சையில், அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் இருவர், குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வெலிக்கட சிறைச்சாலையில்

மேலும்...
மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர்

மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர் 0

🕔13.Apr 2019

தூக்கு தண்டனையை மே முலாம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதற்கிணங்க போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 04 பேர், முதலாவதாக தூக்கில் இடப்படவுள்ளனர். சித்திரைப் புதுவருடம் கழிந்து ஒரு சில வாரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இதேவேளை, அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்குத்

மேலும்...
அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு

அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔20.Mar 2019

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம்

மேலும்...
அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம்

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம் 0

🕔28.Feb 2019

அலுகோசு பதவிக்கு இதுவரை 45பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரியவருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு, விரைவில் அந்தத்  தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனையடுத்து, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியது. இந் நிலையில் அலுகோசு பதவிக்கு இதுவரை 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும்

மேலும்...
அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்; க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் அவசியம்

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்; க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் அவசியம் 0

🕔12.Feb 2019

அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது. இலங்கைப் பிரஜைகளான ஆண்களிடம் மட்டுமிருந்து, அலுகோசு பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிப்போர் – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுளுக்கு மேற்படாத தடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு, அவற்றில் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருந்தல் அவசியமாகும். குறித்த அலுகோசு பதவிக்குத் தெரிவு

மேலும்...
சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார் 0

🕔16.Jul 2018

மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பணியை சம்பளமின்றி இலவசமாக செய்வதற்கு – தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், இதனை தான் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது எல்.பி.

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர்

மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர் 0

🕔13.Jul 2018

இலங்கை சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 300க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் – போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இந்த நிலையில், மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றினை, ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கான

மேலும்...
அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 0

🕔13.Oct 2015

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24

மேலும்...
இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம் 0

🕔28.Aug 2015

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்