வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. சீன தலைவர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று திங்கள்கிழமை வட கொரியத் தலைவர் சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இருப்பார்