ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – 02