Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை

கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை 0

🕔4.Dec 2018

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் 0

🕔4.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்

மேலும்...
ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔29.Nov 2018

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, ஜனாபதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர் அனும் அடிப்படையில் ஜனாதிபதி இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள்

மேலும்...
கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற அமர்வு: இரண்டையும் புறக்கணித்தது ஆளுந்தரப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற அமர்வு: இரண்டையும் புறக்கணித்தது ஆளுந்தரப்பு 0

🕔29.Nov 2018

நாடாளுமன்ற அமர்வினை ஆளுந்தரப்பினர் இன்று புறக்கணித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினமும் ஆளும் கட்சியினர் சபை அமர்வினை புறக்கணித்தனர். முன்னதாக நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டதாரியாக இருக்க வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: றிசாட்

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டதாரியாக இருக்க வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: றிசாட் 0

🕔27.Nov 2018

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு

கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு 0

🕔27.Nov 2018

நாடாளுமன்ற அமர்வினை ஆளும் கட்சியினர் இன்று புறக்கணித்துள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நாடாளுமன்றம் ஆரம்பமானது. இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, ஆளும் தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆளும் தரப்பினரின் பங்குபற்றலின்றியே நாடாளுன்ற அமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும்...
சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர்

சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர் 0

🕔26.Nov 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சபையில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்தே செயற்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். “ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற அரசியல் செயற்பாடுகளை தவிர்க்கும் முகமாகவே

மேலும்...
நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்

நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம் 0

🕔26.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்து  ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு, ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதற்கிணங்க, பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான புவனகே அலுத்விகார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ

மேலும்...
எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே 0

🕔24.Nov 2018

நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என்று, பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். “நாடாளுமன்றில் 121 உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், தனிப்பட்ட கட்சி எனும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 100 ஆசனங்களே உள்ளன. அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதியைக் வேண்டிக் கொள்வதாக, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும், இது வரை அவர்கள் அதனைக் காட்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்

மேலும்...
அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு

அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு 0

🕔20.Nov 2018

அடிதடி, சண்டைகளுடன் நிறைவடைந்த, கடந்த வாரத்தின் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் (08 கோடி) செலவாகியதாக, நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வொன்றினை நடத்துவதற்கு 25 மில்லியன் ரூபாய் (இரண்டரைக் கோடி) செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் 95 அமர்வுகளுக்காக,

மேலும்...
ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔19.Nov 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார். இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ்

மேலும்...
மஹிந்தவுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவரின் மகன் விலை பேசுகிறார்

மஹிந்தவுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவரின் மகன் விலை பேசுகிறார் 0

🕔18.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 03 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் விலை பேசி வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தனது ‘ட்விட்டர்’ பதிவொன்றில் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன்

மேலும்...
அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும்

மேலும்...
நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு 0

🕔16.Nov 2018

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 01 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பலத்த பொலிஸ் காவலுடன் நாடாளுமன்றுக்கு நுழைந்த சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பினை விடுத்தார். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்