Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு 0

🕔20.Nov 2016

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதி செயலக உணவுக்காக 150 மில்லியன் ரூபாய் (15 கோடி) செலவிடப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்

மேலும்...
71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த 0

🕔18.Nov 2016

–  முகம்மட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இன்று காலை சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தனது மெதமுலன வீட்டில் குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. MR எனும் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை இதன்போது மஹிந்த வெட்டினார். சிராந்தி

மேலும்...
இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔18.Nov 2016

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்ற நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவர்கள் சிரியாவுக்குச் சென்று, அங்கிருந்தே ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் என்னும் அவர் குறிப்பிட்டார். மேலும், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை பரப்பக்கூடிய உண்மையற்ற தகவல்களை வெளியிடுகின்றன என்றும், இதனால் பொதுமக்கள்

மேலும்...
வரவு – செலவு திட்ட விவாதம்: போட்டுத் தாக்கினார் மஹிந்த

வரவு – செலவு திட்ட விவாதம்: போட்டுத் தாக்கினார் மஹிந்த 0

🕔16.Nov 2016

வரவு – செலவுத் திட்ட யோசனையில் வௌிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ள அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை

மேலும்...
அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி

அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி 0

🕔12.Nov 2016

அங்கயீனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பி கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ

மேலும்...
கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம் 0

🕔28.Oct 2016

பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், நேற்றைய தினம் கடுமையான மஞ்சள் நிறத்தில் சேர்ட் அணிந்து கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து

மேலும்...
மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔25.Oct 2016

மீள்திருத்தப்பட்ட  வற் வரி தொடர்பான சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டதென நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்ப்பினை சபையில் தெரியப்படுத்தினார். மீள் திருத்தப்பட்ட வற் வரி தொடர்பான சட்டமூலம், கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும்...
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய் 0

🕔20.Oct 2016

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாவும், சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 07 ஆயிரத்து 694 கோடி ரூபாவும் ஒதுக்கீடு

மேலும்...
புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு 0

🕔8.Oct 2016

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றமே அன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் இணங்கி எடுக்கும் தீர்மானத்தையே நாம் நடைமுறைப்படுத்துவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன

மேலும்...
வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது

வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது 0

🕔7.Oct 2016

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு, நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி

மேலும்...
எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம் 0

🕔10.Sep 2016

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ்

காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் 0

🕔26.Aug 2016

யுத்தகாலப்பகுதியில் காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமள்றில் கோரிக்கை விடுத்தார்.காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லீம்கள்  என்ற வேறுபாடின்றி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.காணாமல்போனவர்கள் – இறந்தவர்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தற்காலிக சட்டமூலத்தின் இரண்டாம்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி

ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி 0

🕔25.Aug 2016

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு காணிகளை இழந்து, அதற்குரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான நட்டஈட்டினை, உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்று, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம்சபையில் கேள்வியெழுப்பினார். நட்டஈடு வழங்கப்படவில்லை எனில் அதற்கான தடைகள் பற்றி

மேலும்...
இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔12.Aug 2016

இனப்பிரச்சினைக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு தீர்வாகாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்தார். மாகாண சபைகள் சுயமாக இயங்கக் கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கு சிறந்து தீர்வாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். வர்த்தக அமைச்சின் திருத்த யோசனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔11.Aug 2016

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமூலம், இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கபட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்ததோடு, கட்சித் தலைவர்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்