Back to homepage

Tag "எச்.எம்.எம். ஹரீஸ்"

கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔2.Feb 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விடயங்களையும், கட்சி விடயங்களையும் தொலைக்காட்சி ஊடகத்திலும், முக நூலிலும் கட்சித் தவிசாளர் தெரிவித்திருக்கின்றமை கவலையளிப்பதுடன், கண்டிக்கத் தக்கதுமாகும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்

மேலும்...
வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு

வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு 0

🕔23.Jan 2017

– எம்.வை. அமீர் – ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது சாய்ந்தமருதின் கல்விநிலையானது பின்னோக்கிச் செல்வதாகவும் மிகவும் ஆபத்தான இவ்வாறானதொரு நிலையை சீர்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  கடந்த 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்

மேலும்...
காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு

காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு 0

🕔12.Jan 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – கடலுக்குச் சென்ற நிலையில் காாணாமல் போயிருந்த அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மாலைதீவிலிருந்து ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். காணாமல் போன 06 மீனவர்களில் இருவர் கடந்த 04ஆம் திகதி மாலைதீவில் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஏனைய நான்கு பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும்...
‘சிலுக்கு’ அரசியல்

‘சிலுக்கு’ அரசியல் 0

🕔11.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் – வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பி தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை

மேலும்...
வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது

வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது 0

🕔5.Jan 2017

– முசலி ஹசன் – வில்பத்துவில் முஸ்லிம்கள் காடழித்துக் குடியேறுவதாக கூறும் இனவாதிகளுக்கு அதன் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று வியாழக்கிழமை, முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பினை மு.காங்கிரஸ் பகிஸ்கரித்துள்ளது. இதன் காரணமாக, முசலி முஸ்லிம்களை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கியுள்ளது. “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில்

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண் 0

🕔2.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – திட்டமிடப்படாத அபிவிருத்திகள் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு ஒலுவில் துறைமுகம் நிகழ்கால உதாரணங்களில் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகமானது அரசியலை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக பிரமிப்பூட்டுவதற்காக ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இதற்காக, ஒலுவில்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மண்ணை அகற்றுமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் கோரிக்கை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மண்ணை அகற்றுமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் கோரிக்கை 0

🕔28.Nov 2016

– அகமட் எஸ். முகைடீன் – ஒலுவில் மீன்பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தொடர்பான வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔14.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – கல்முனை நகர அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரிஸின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கலந்து

மேலும்...
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு

உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு 0

🕔20.Sep 2016

– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் – கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக, மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின்

மேலும்...
ஹரீஸ் தொடர்பில் ஹக்கீம் கடுப்பு; தலைவரை மதியாமல் சென்றார் மன்சூர்: நடமாடும் சேவை புதினங்கள்

ஹரீஸ் தொடர்பில் ஹக்கீம் கடுப்பு; தலைவரை மதியாமல் சென்றார் மன்சூர்: நடமாடும் சேவை புதினங்கள் 0

🕔19.Aug 2016

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ளாத, தமது கட்சியின் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – அதிருப்தியினையும், கடுப்பினையும் வெளியிட்டதோடு, இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் – தான் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். மேற்படி நடமாடும் சேவை, நேற்று வியாழக்கிழமை

மேலும்...
கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை 0

🕔15.Jul 2016

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல்

மேலும்...
இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு 0

🕔29.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்காக, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இதற்கான நிதியினை விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று புதன்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்குச் சென்று, குறித்த மைதானத்தினை நேரடியாக

மேலும்...
அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள்

அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள் 0

🕔16.Sep 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனைத் தொகுதிக்கான பிரதான வைபவம் புதன்கிழமை காலை, கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும் 0

🕔2.Sep 2015

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔21.Jul 2015

– முன்ஸிப் –வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்