Back to homepage

Tag "அரசியலமைப்பு"

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள  போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது

மேலும்...
அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி  நிற்பவர்களாக மாற்றும்

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும்

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு 09 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டினை  ஏற்படுத்தும். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்துக்

மேலும்...
கண்களில் கரிக்கும் அபாயா

கண்களில் கரிக்கும் அபாயா

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள் என கல்வியின் ஆரம்பமே எமக்குக் கற்றுத் தந்து விடுகிறது. ஆக, இவை மூன்றும் இன்றேல் வாழ்க்கை கடினமாகி விடும். ஷண்முகா வித்தியாலயத்தின் ‘அபாயா’ சர்ச்சை அடிப்படைத் தேவைகளுள்

மேலும்...
சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி

சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி

அரசியலமைப்பின் உத்தேச வரைபில் சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின் ஆசன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி; தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபில் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்று

மேலும்...
கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும்

கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும்

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசியலமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம்

மேலும்...
ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – 02

மேலும்...
இரண்டாம் கட்ட ஆட்டம்

இரண்டாம் கட்ட ஆட்டம்

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்

மேலும்...
இனப்பிரச்சினையே  இனிப்பிரச்சினை

இனப்பிரச்சினையே இனிப்பிரச்சினை

– சுஐப் எம் காசிம் – வடக்கு, கிழக்குப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை தொடுவானம் போல் தூரமாகிச் சென்றதால், இது வரைக்கும் இழுபட்டுச் செல்கிறது.இது போன்றதொரு இழுபறி ஏற்படாமலிருக்க இனியாவது இச்சமூகங்கள் ஒற்றுமையில் ஒன்றிப்பதே, இன்று அவசரத் தேவையாகவும் உள்ளது.இனிவரப்போகும் காலங்களில் பரவலாகப் பேசப்படவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வின் ஆயுளை,

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, ஜனாபதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர் அனும் அடிப்படையில் ஜனாதிபதி இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள்

மேலும்...