Back to homepage

Tag "அக்கரைப்பற்று"

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம் 0

🕔28.Jun 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமொன்று, சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது. இதில் காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகத் தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த

மேலும்...
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம்

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம் 0

🕔15.Jun 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி 0

🕔1.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை மாலை காரில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுவன் அதே இடத்தில் பலியானார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றது. கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார், சிறுவன் மீது மோதியதில் சிறுவன்

மேலும்...
ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது

ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது 0

🕔31.May 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 02 கிராம் ஹெரோயினுடன் அக்கரைப்பற்று காகில்ஸ் புட் சிட்டி அருகில் வைத்து, மேற்படி நபரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர். பொத்துவிலில் இருந்து வேறு நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக, குறித்த

மேலும்...
கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம்

கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம் 0

🕔26.May 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர்பீ.கேதீஸ்வரன், கல்வியமைச்சின்உதவிச் செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், பாடங்களுக்குப்

மேலும்...
அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு

அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு 0

🕔27.Mar 2016

– முன்ஸிப் – ‘காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி அக்கரைப்பற்று நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 01 மணி

மேலும்...
அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் பிரிக்கப்பட மாட்டாது: அமைச்சர் ஹக்கீம் உறுதி வழங்கியதாக நஸார் ஹாஜி தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் பிரிக்கப்பட மாட்டாது: அமைச்சர் ஹக்கீம் உறுதி வழங்கியதாக நஸார் ஹாஜி தெரிவிப்பு 0

🕔24.Mar 2016

– பி. முஹாஜிரீன் –“நீர்வழங்கல் வடிகாலமைப்புக்குப் பொறுப்பான அமைச்சராக நான் இருக்கும் வரை, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒருபோதும் பிரிக்கப்படமாட்டாது எனவும் இடமாற்றப்பட மாட்டாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் உறுதி வழங்கியுள்ளார்” என்று முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்? 0

🕔8.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து

மேலும்...
அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔29.Feb 2016

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு

மேலும்...
அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி

அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி 0

🕔27.Jan 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.பிரகீத் எக்னலி கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்கும் ராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசி சமிக்ஞையினை வைத்து இந்த விடயம் கண்டயறியப்பட்டுள்ளது.பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது குறித்து முக்கிய தகவல்களை

மேலும்...
ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம்

ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம் 0

🕔1.Jan 2016

– மப்றூக் – ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே ஊழல், மோசடி மற்றும் தொழில் ரீதியான இடர்கள் போன்றவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீம் தெரிவித்தார். புது வருடத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள் 0

🕔26.Nov 2015

– வாத்தியார் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் நடத்தப்பட்ட மூன்றாந் தவணை பரீட்சை, தரம் – 10 க்குரிய இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்குரிய வினாத்தாளில், அதிகமான அர்த்தப் பிறழ்வுடன் கூடிய எழுத்துப் பிழைகள்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை 0

🕔10.Oct 2015

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்

தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல் 0

🕔7.Oct 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான 13 மாணவர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும், மேற்படி 13

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்