Back to homepage

Tag "வேலை நிறுத்தம்"

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது 0

🕔13.Sep 2023

புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது. புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. 5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் திங்கட்கிழமை தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும்...
புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும் 0

🕔12.Sep 2023

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக நெரிசல் மிகுந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களே ஏற்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியதோடு, சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரும்

மேலும்...
18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது

18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது 0

🕔12.Feb 2022

தாதியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகுவதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, இச்சங்கம் மேற்படி முடிவை எடுத்துள்ளது. 18 தொழிற் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து, அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது. கடந்த 07ஆம் திகதி

மேலும்...
அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு 0

🕔11.Feb 2022

அரச வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு ஒசுசல (இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம்) விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பல்வேறு

மேலும்...
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவு 0

🕔28.Dec 2021

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். அதற்கமைய ரயில் நிலைய அதிபர்கள் நாளை (29) முதல், பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். 25 கோரிக்கைகளை முன்வைத்துபொதிகள், எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா

மேலும்...
08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் 0

🕔27.Sep 2021

சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதன்படி இன்று காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையிலான 05 மணித்தியாலங்கள் – இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கிணங்க அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் (GNOA) இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. 08 கோரிக்கைகளை

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது 0

🕔26.Jun 2018

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம், இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வருவகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அஞ்சல் ஊழியர்களின் தொழிற் சங்கத்துடன், தபால்துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கான

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு 0

🕔17.Jun 2018

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு கடந்த 06 நாட்களில் சுமார் 1070 மில்லியன் ரூபாய் (107 கோடி) வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி தொடக்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்க ஒன்றியம், வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 24

மேலும்...
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், கடமைக்கு திரும்பினர்

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், கடமைக்கு திரும்பினர் 0

🕔17.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை, மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளனர் என்று பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த காலப்பகுதியில் 15 பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சகல உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஆயினும், கல்விசாரா

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது 0

🕔12.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. 20 வீதமான ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து, பெப்ரவரி 27ஆம் திகதி முதல், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்

மேலும்...
பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு

பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட இணக்கம்: அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔3.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று, உயர்கல்வி அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கல்வி சாரா ஊழியர்களுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு 0

🕔28.Feb 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம்,  தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின்

மேலும்...
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...
வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம் 0

🕔23.Jun 2017

– க. கிஷாந்தன் –‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும்  நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்படுகின்றன.இதனால், ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட

மேலும்...
சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன

சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன 0

🕔5.May 2017

‘சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரியை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 03 கோரிக்கைகளை முன்வைத்து, பல துறைகளில் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக அரச மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் மேற்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், புகையிரத திணைக்களத்தின் இரண்டு தரங்களைக் கொண்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, லோகோமோட்டிவ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்