Back to homepage

Tag "உள்ளுராட்சித் தேர்தல்"

தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு

தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள்ள சக்தியைச் சேர்ந்த பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி – பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சபாநாயகர் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் முன்பாக நின்று கொண்டு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதாகைகளை ஏந்தியவாறு,

மேலும்...
உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு

மேலும்...
தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு

தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் கடினம் என, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருக்கிறார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும்...
தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி

மேலும்...
தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர்

தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர் 0

🕔14.Feb 2023

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை – திட்டமிட்ட வகையில் நாளை (15) முதல் விநியோகிக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவுக்கும், கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (14) இடம் பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிய பணம் செலுத்தப்படும்

மேலும்...
உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔12.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பெப்ரவரி இறுதி வரை – தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்துக்காக குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். “இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2018

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “எதிர்வரும் மாகாண

மேலும்...
புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட்

புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையில் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை

மேலும்...
பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12.Feb 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான முழுப் பொறுப்பினையும் , தான் ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்னைச் சந்தித்த போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார். இதேவேளை, அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். “இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்

புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் 0

🕔8.Feb 2018

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள வாக்குச்சீட்டில், வேட்பாளரின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் இருக்காது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேட்சைக் குழுவென்ற சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும் என்றும் ஆணைக்குழு

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன 0

🕔7.Feb 2018

உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார். இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்ட

மேலும்...
புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு 0

🕔5.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 42 கட்சிகளையும், 222 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த வேட்பாளர்களில் 341 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,356 பேர் தெரிவு

மேலும்...
விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும் 0

🕔3.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு, விசேட தேவையுடையோர் செல்வதற்காக வாகனப் போக்குவரத்து வசதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியினைப் பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினத்துக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் பொருட்டு, தேர்தல்கள் திணைக்களத்தினால் இலவச​போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. இதேவேளை நடைபெறவுள்ள

மேலும்...
வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு 0

🕔17.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில்,  பார்வையிழந்தவர்கள் உள்ளிட்ட விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் பொருட்டு, மற்றொருவரின் உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு உதவி வழங்குகின்றவர் வேட்பாளராகவோ அல்லது கட்சிகள் சார்ந்த வாக்களிப்பு நிலைய முகவராகவே இருக்கக் கூடாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், உதவியளிப்பவர் 18 வயதை நிறைவு செய்தவராகவும் இருத்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்