Back to homepage

Tag "இஸ்ரேல்"

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா 0

🕔19.Apr 2024

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில் மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருள்கள் இடைமறிக்கப்பட்டன என, ஈரான் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஈரானின் இஸ்ஃபஹான் மாகாண வானத்தில் மூன்று ட்ரோன்கள் காணப்பட்டன என்றும்,

மேலும்...
“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு 0

🕔17.Apr 2024

இஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது, ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலின்போது நிரூபணம் ஆகியிருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள், ஈரானின் பல ஏவுகணைகளை

மேலும்...
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு 0

🕔14.Apr 2024

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இம்மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறுகிறது. இந்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

மேலும்...
பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான்

மேலும்...
இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0

🕔15.Feb 2024

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான போக்குவரத்த ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது – இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Feb 2024

– பாறுக் ஷிஹான் – காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை 0

🕔9.Jan 2024

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில் 4,257 மாணவர்களும், மேற்குக் கரையில் 39 மாணவர்களும் கொல்லப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில், 281 அரசாங்கப் பாடசாலைகளும் 65 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண

மேலும்...
அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை 0

🕔7.Jan 2024

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த

மேலும்...
பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர் 0

🕔3.Jan 2024

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும்

மேலும்...
ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி 0

🕔3.Jan 2024

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அல் – அரூரியின் தாய் மற்றும் சகோதரிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டுள்ளது. இதேவேளை, லெபனானின் தெற்கு பெய்ரூட்டில்

மேலும்...
ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி 0

🕔2.Jan 2024

ஹமாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் – அரூரி உள்ளிட்ட சிலர், இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. லெபனான் – பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இன்று (02) நடத்தப்பட்ட தாக்குதலில் அல் –

மேலும்...
இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது 0

🕔2.Jan 2024

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக, சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 33 பேரை – தாங்கள் கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை அந்த நாட்டு அரசு நடத்தும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துருக்கியின் எட்டு மாகாணங்களில் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சதியில் ஈடுபட்ட மேலும் 13

மேலும்...
போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது 0

🕔26.Dec 2023

காஸாவில் போர் நிறுத்தப்பட மாட்டாது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காஸாவிலுள்ள பலஸ்தீனர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டும் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு ஹமாாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 24 மணி நேரத்தில் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 382

மேலும்...
ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி

ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி 0

🕔23.Dec 2023

முகம்மது அபு ஹ்வைடி (Mohammad Abu Hwaidi) எனும் ஊடகவியலாளர், காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் இன்று (23) கொல்லப்பட்டார். காஸாவில் நடைபெற்றுவரும் போரின் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை 100 ஆக உயர்ந்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, காசா மீதான இஸ்ரேலின் போரை ‘பத்திரிக்கையாளர்களுக்கான நவீன வரலாற்றில் மிகக் கொடியது’ என்று

மேலும்...
யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது

யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது 0

🕔22.Dec 2023

காஸாவுக்குள தரைப்படை நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 784 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் 390 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 734 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்