தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

🕔 March 11, 2016
– அஷ்ரப் ஏ. சமத் –
லுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பிலுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக, கல்கிஸ்ஸையில் கல்விசாா் கற்கை நிலையமொன்று மீள்நிர்மாணிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தினை உயா்கல்வி ராஜாங்க அமைச்சா் மோகன்லால் கெயிரு திறந்து வைத்தார்.

தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின்  உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். எம். நாஜீம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மு.காங்கிரசின் மறைந்த மறைந்த தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம். அஸ்ரபினால் 20 வருடங்களுக்கு முன்னர், இந் நிலையம் கல்கிசையில் ஒரு கற்கை பயிற்சி நிலையமான உருவாக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூா், குவைத் நாட்டின் துாதுவராகக்  கடமையாற்றிய காலத்தில் இப் பல்கலைக்கழககத்திற்கு குவைத் நாட்டிலிருந்து நிதி பெறப்பட்டது.  அந்த வகையில், மேற்படி கட்டிடத்தினை மீள்நிர்மாணிப்பதற்கு  குவைத் அரசாங்கம் 64.85 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது.

தென்கிழக்குப் பல்கலைக்கழப் பதிவாளர் எச். அப்துல் சத்தார் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்