டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

🕔 March 11, 2016

Dr. Nakfer - 01(முன்ஸிப்)

ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார்.

மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில், இவருக்கான பட்டம் வழங்கப்படவுள்ளது.

மேற்படி பட்டத்தினை அன்றைய தினம் பெறும் 10 பேரில், இவர் மட்டுமே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் கே.எல். நக்பர், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ பிரதியமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவுக்கான நிபுணத்துவ ஆலோசகராகவும் கடமையாற்றுகின்றார்.

கணிணி விஞ்ஞானத்துறையிலும் இவர் முதுமானிப்பட்டம் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்