முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

🕔 March 9, 2016

Uduve Thammaloga thero - 0873முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையில் கடந்த ஜனவரி மாதம் யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டனர்.

இதனையடுத்து இரண்டரை வயதுடைய மேற்படி யானைக்குட்டி, வனவிலங்குத் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

குறித்த யானைக்குட்டியானது விகாரையின் தலைமை விகாராதிபதி உடுவே தம்மாலோக தேரரின் பெயரிலோ, அல்லது விகாரையின் பெயரிலோ பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, யானைக்குட்டியொன்றினை அனுமதியின்றி வைத்திருந்த குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரரை சந்தேக நபராக பெயர் குறிக்குமாறும், விலங்கினங்கள் மற்றும் தாரங்கள் சட்டத்தின் கீழ், தம்மாலோக தேரருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றினைப் பதிவு செய்யுமாறும், கடந்த பெப்ரவரி மாதம் சட்டமா அதிபர் உரிய அதிகாரிகளைப் பணித்திருந்தார்.

இதேவேளை, தம்மாலோக தேரரிடம் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக் கொண்ட பின்னர், அவரை நீதிமன்றின் முன்னால் ஆஜர்படுத்துமாறும் குற்றப் புலாய்வுத் திணைக்களப் பணிப்பாளரை சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்